அமெரிக்காவில் கொவைட்-19 பரவல் பற்றிய உண்மை
2021-08-13 15:28:18

கொவைட்-19 நோய் பரவல் காலத்தில், அமெரிக்காவின் அரசியல்வாதிகள் எப்போதுமே சீனாவின் மீது குற்றஞ்சாட்டி வந்தனர். இதன் மூலம் நோய் பரவல் தடுப்பில் தோல்வி என்று கூறப்படுவதைத் தவிர்க்க முடியும் என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிஞர் அல்லிசன் கூறினார். ஒரு வாக்கியம், சீனாவுக்கு எதிரான அமெரிக்க அரசியல்வாதிகளின் அரசியல் இலக்கைக் குறிப்பிட்டுள்ளது. இது சரிதான். புதிய கரோனா வைரஸ் பரவல் உலக ரீதியான பொதுச் சுகாதாரச் சீற்றமாக இருக்க வேண்டும். ஆனால், அமெரிக்க அரசியல்வாதிகள் இதைப் பயன்படுத்தி ஆயுதங்களாக மாற்றி, நாடுகளுக்கிடையிலான மோதலை உருவாக்கியுள்ளனர்.

பிற நாடுகளின் மீது அவதூறு பரப்புவதால், சொந்த பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. கொவைட்-19 அமெரிக்காவில் எப்போது பரவத் தொடங்கியது? துவக்கத்தில் உண்மையான பரவல் வழி என்ன? அதன் தோற்றம், அமெரிக்க உயிரின ஆய்வகத்துடன் தொடர்பு இருக்கிறதா? முதலிய பல சந்தேசங்கள் பற்றி, உலகச் சுகாதார அமைப்பு அமெரிக்காவின் மீது புலனாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று உலகில் பல நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.