கோவிட்-19 தொற்று பரவலில் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திய அமெரிக்கா
2021-08-14 19:04:54

உலக  மக்கள் தொகையில் அமெரிக்கா 4 சதவீதம் மட்டும் வகிக்கிறது. ஆனால், அமெரிக்காவில் கோவிட்-19 தொற்று பாதிப்பு, உலகளவில் 18 விழுக்காட்டு இடம் பெறுகிறது. கோவிட்-19 தொற்றை எதிர்த்து போராடுவதில் அமெரிக்கா சிக்கலை ஏற்படுத்தும் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மேலும், கட்டுப்பாட்டை இழந்துள்ள தொற்று நோயை எதிர்கொள்ளும் போது, அமெரிக்கா, பயணக் கட்டுப்பாட்டு நடவடிக்களை மேற்கொள்ளாமல்,  வைரஸ் தொடர்ச்சியாக உலக நாடுகளில் பரவச் செய்து, உலக மக்களின் ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய வருவது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார வளர்ச்சி மற்றும் தேர்தலுக்கான வாக்கு ஆதரவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க அரசாங்கம் கடந்த ஆண்டின் ஆகஸ்டு மாதம், வைரஸ் பரவல் உச்ச நிலையில் இருந்தபோது,  அமெரிக்க குடிமக்களின் உலக பயணத் தடை உத்தரவை நீக்குவதாக அறிவித்திருந்தது. அதன் விளைவாக, 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் வரை, 2 கோடியே 31 லட்சத்து 95 ஆயிரம் அமெரிக்க குடிமக்கள் உலக நாடுகளுக்கு சென்றுள்ளனர். கடந்த ஆண்டின் நவம்பர் முதல் 2021ஆம் ஆண்டு ஜனவரி வரை, அமெரிக்காவில் வைரஸ் பரவலின் உச்ச நிலைக் காலத்தில்,  தினமும் 87ஆயிரம் அமெரிக்கர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறினர். இதனால், வைரஸ் உலகளவில்  விரைவாக பரவியதால், உலக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச மனித நேயத்தைப் பொருட்படுத்தமால்,  எந்த விதமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமல், சட்டவீரோதமாக குடியேறுபவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியது. இச்செயல், சர்வதேச சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பல தரப்புகளால்  கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

கூடுதலாக, வெளிநாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களில், உள்ளூர் நோய் தடுப்பு நடவடிக்கையைக் கடைப்பிடிக்காமல் செயல்பட்ட அமெரிக்க படையினர்,  வைரஸ் பரவலை ஏற்படுத்தினர்.

உலகளவில் கோவிட்-19 தொற்று பரவலில் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்புகளை அமெரிக்கா ஏற்க வேண்டும். அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர், உலகளவில் அரசியல் ரீதியிலான வைரஸை பரப்பி, தொற்று எதிர்ப்பு ஒத்துழைப்பைச் சீர்குலைத்துள்ளனர் என்பது பல்வேறு  உண்மைகளாகும்.

அமெரிக்க அரசியல்வாதிகள், தன்னலம் கருதாமல் அரசியல் தந்திரத்தை உடனடியாக நிறுத்தி, தொற்று தடுப்பு நடவடிக்கையை அறிவியல்பூர்வமாகச் செயல்படுத்த வேண்டும்.