கோவிட்-19 எதிர்ப்பில் அமெரிக்கா தோல்வியடைவது உறுதி
2021-08-15 15:37:51

அமெரிக்காவில் 3.6 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 6 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்ற உண்மையை மக்கள் நம்ப முடியாது.

ஒரே தொற்றை எதிர்கொண்டே அமெரிக்க மக்களின் தலைவிதி வேறுபட்டதாக உள்ளது. அமெரிக்காவில் காணப்பட்டுள்ள அரசியல் பிரிவினை என்பது,  இத்தகைய பின்விளைவை ஏற்படுத்தியதன் முக்கிய காரணமாகும்.

இந்த அரசியல் பிரிவினையால்,  உலகளவில் மிக சிறந்த மருத்துவத் தொழில் நுட்பம், திறமை மற்றும் வளங்கள் ஆகியவை கொண்ட அமெரிக்கா, தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் ஒன்றுபட முடியாது குறிப்பிடத்தக்கது.

இந்த அரசியல் பிரிவினையால், அமெரிக்காவின் சாதாரணமான மக்கள் பாதிப்புக்குள் சிக்கியுள்ளனர். இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் முதல், அமெரிக்கா முழுவதிலும்,  ஒரு நாளில் புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை, பல நாட்களுக்கு தொடர்ச்சியாக ஒரு லட்சத்தைத் தாண்டியது. அதே வேளையில், குணமடைந்தவர்களுக்கு மிகுந்த அதிக பணம் செலுத்த வேண்டியது.

அமெரிக்காவில் இந்த அரசியல் பிரிவினை,  வைரஸ் போன்றே வேகமாக, அமெரிக்க சமூகத்தின் பல்வேறு துறைகளைப் பிரிவுப்படுத்தி வருகிறது. எடுத்துக்காட்டாக, செல்வம் விரைவாக சிலரின் கைகளுக்குள் புழங்கி வருகிறது. இதன் விளைவாக, பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான இடைவெளி மேலும் விரிவாகி வருகிறது. அமெரிக்க சிந்தனை கிடங்கு உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில், 2020ஆம் ஆண்டு மார்ச் தொடங்கி 16 மாதங்களில்,  அமெரிக்காவின் 713 பணக்காரர்களின் மொத்த சொத்துத் தொகை,  ஒரு லட்சத்து 80ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் அதிகரித்து,  4லட்சத்து 70ஆயிரம் கோடி டாலரை எட்டியுள்ளது. இக்காலத்தில், கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில், அமெரிக்காவில் ஏழை மக்களின் விகிதம், 2020ஆண்டு ஜுன் திங்ளில் இருந்த 9.3 விழுக்காட்டில் இருந்து நவம்பர் திங்களில் 11.7 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

கோவிட்-19 தொற்றை எதிர்த்து போராடுவதில் உலக நாடுகளுக்கு ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு, மிக மிக வலிமையான ஆயுதமாகும். ஆனால், அமெரிக்காவில் அரசியல் பிரிவினை, உலகின் ஒற்றுமைக்கு தடையை ஏற்படுத்தி, தனக்கும் பிறருக்கும் தீங்கு விளைவித்து வருகிறது.