அமெரிக்காவில் சமூக கொந்தளிப்பு தீவிரமாகுதல்
2021-08-17 19:15:48

மனித உரிமைகளை பாதுகாப்பவர் என்று அமெரிக்கா தன்னையே அறிவித்துக் கொண்டது. அது, மனித உரிமை என்ற பெயரில் மற்ற நாடுகளின் உள் விவகாரத்தில் அடிக்கடி தலையிட்டு, தடை விதித்து வருகின்றது. ஆனால், கோவிட்-19 தொற்று நோய் ஏற்பட்ட பின், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள குழப்பம், கொந்தளிப்பு மற்றும் நெருக்கடி போன்றவை தெளிவாக வெளிப்பட்டு வருகின்றன.

சமூகக் கொந்தளிப்பானது, அமெரிக்காவில் எப்போழுதும் நிலவுகின்ற பிரச்சினையாகும். கோவிட்-19 தோற்று நோயால் ஏற்பட்ட பாதிப்பினால், இந்தப் பிரச்சினை மேலும் தீவிரமாகியுள்ளது. கடந்த ஓராண்டில், அமெரிக்காவில் நிகழ்ந்த வன்முறைக் குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில், சிறுப்பான்மை இனத்தவரின் மனித உரிமையை மீறும் வன்முறைச் செயல்களும் தீவிரமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

தவிரவும், அமெரிக்க அரசியல் துறையின் குழப்பமும் தீவிரமாகியுள்ளது. சமீபத்தில் வாஷங்டன் போஸ்ட் வெளியிட்ட விமர்சனக் கட்டுரை ஒன்றில், நாடாளுமன்றம் மீதான தாக்குதல், வன்முறைக் கலகச் செயலாகும். பைடன் அரசு ஆட்சிக்கு வந்த பின், அமெரிக்காவின் இரு கட்சிகளுக்கிடையேயான உறவு மேலும் மோசமாகி உள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட்-19 எதிர்த்து போராடுவதில் அமெரிக்காவின் தோல்வி, பொருளாதார மீட்சி வலிமையின்மை, சமூக கொந்தளிப்பு அதிகரிப்பு முதலிய காரணிகளால், அமெரிக்காவின் அடிமட்ட மக்கள் முன்கண்டிராத நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.