அமெரிக்காவில் நிறைய போலி தகவல்களால் கடும் தீங்கு!
2021-08-18 18:24:49

போலி செய்தி என்பதே,  அமெரிக்காவின் முன்னாள் அரசுத் தலைவர் அடிக்கடி பேசிய வார்த்தை ஆகும். ஆனால், இந்த வார்த்தை,  தற்போது அமெரிக்காவில் நிகழும் காட்சியைப் பிரதிபலித்து வருகிறது. கோவிட்-19 தொற்று ஏற்பட்ட பிறகு, அமெரிக்காவில் நிறைய போலி செய்திகள் மற்றும தகவல்கள் எங்கும் சூழ்ந்துள்ளன.  உலகின் மிகப் பெரிய போலித் தகவல் நாடாக அமெரிக்காத் திகழ்கிறது. தொற்றை எதிர்த்து போராடுவதற்கான பொது அறிவு மற்றும் அறிவியல் ஆதரவு ஆகியவை அந்த சூழலில் மூழ்கியுள்ளன.

தொற்று நோய் தோன்றிய ஆரம்பக் காலத்தில், அமெரிக்க வெள்ளைமாளிகை, பல்வேறு தரப்புகளின் முன்னெச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல், நோய் தடுப்புக்கான மிக சிறந்த வாய்ப்பை இழந்துள்ளது. போலி செய்தியை குற்றஞ்சாட்டிய அப்போதைய அரசுத் தலைவர்,  கோவிட்-19  பெரிய காய்ச்சல் மட்டுமே என்றும் வெப்பநிலை உயர்வதுடன் தானாக மறைந்து விடும் என்றும் பொது மக்களிடம் கூறினார்.

அதேவேளையில்,  மேற்கத்திய  நாடுகளின் செல்வாக்கான செய்தி ஊடகங்கள், கருத்து சுதந்திரம் என்ற பெயரிலே விருப்பத்துடன் செயல்பட்டு உள்ளதால்,  போலி தகவல்கள் அதிகமாகப் பரவியுள்ளன.  அமெரிக்காவின் தி கர்னேல் பல்கலைக்கழகத்தின் அறிவியல் கூட்டணி வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், 2010 ஜனவரி முதல் மே  வரை,  உலகின் ஆங்கில மொழி ஊடகஙகளில்,  கோவிட்-19 தொற்று பற்றிய 3.8 கோடிக்குமே மேலான கட்டுரைகளில், 11 லட்சத்துக்கும் அதிகமான கட்டுரைகளில் போலி தகவல்கள் அடங்கி உள்ளன.

தற்போது, அமெரிக்காவில் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்வடர்களின் மொத்த எண்ணிக்கை, உயிரிழந்தோரின் எண்ணிக்கை தலா, 3.7 கோடி மற்றும் 6.2 லட்சத்தைத் தாண்டியது. இந்த எண்ணிக்கைகளில், அமெரிக்கா முதலிடம் பிடித்தது. தொற்று தடுப்பில் அமெரிக்கா தோல்வியடைந்ததற்கான காரணங்களில் ஒன்று, போலி தகவல் பரபரப்பு தான். அரசியல் சுயநலன்களை பெற்று, பொறுப்புகளை தட்டிக் கழிக்கும் வகையில், பொய்களை உருவாக்கி உள்ள அமெரிக்க அரசியல்வாதிகள்,  அமெரிக்க மக்களை ஏமாற்றியதோடு, உலகின் நோய் தடுப்பு முன்னேற்றப் போக்கில் தடையை ஏற்படுத்தியுள்ளது.