© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
கோவிட்-19 தோற்றம் குறித்து அமெரிக்க உளவுத் துறை செய்து வரும் புலனாய்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அமெரிக்க அரசின் உயர்மட்டத்தின் கருத்தில், புலனாய்வின் முடிவு அதன் நோக்கம் அல்ல. புலனாய்வின் மூலமாக, சீனாவின் தூதாண்மை முயற்சிகளைப் புறக்கணிப்பதும், சீனாவுடனான பேச்சுவார்த்தையில் வெல்லும் வாய்ப்புகளை அதிகரிப்பதும் தான் நோக்கம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் செய்தி ஊடகங்களில் பேசினார்.
கோவிட்-19 தொற்றின் தோற்ற ஆய்வில் அமெரிக்கா மேற்கொள்ளும் தந்திரத்திற்கான சான்று இது தான். கோவிட்-19ஐ விட, தொற்று தோற்ற ஆய்வில் அமெரிக்காவின் சதி மேலும் கடுமையாக இருக்கும். ஒருப்புறம், கோவிட்-19 தோற்றம் குறித்து உலக அறிவியல் துறையின் ஆய்வுப் பணியில் அமெரிக்கா செயல்படுத்தி வரும் அரசியல் தந்திரம் தடையை ஏற்படுத்துகிறது. இதனால், அறிவியல் ஆயுதத்தைப் பயன்படுத்தி, பெருந்தொற்றை எதிர்த்து வெற்றி பெறும் முன்னேற்றம் சீர்குலைக்கப்படுகிறது. மறுப்புறம், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளை, தொற்றின் தோற்றத்துடன் சேர்க்க அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் முயன்று வருகின்றனர். அதன் காரணமாக, இனப் பாகுபாடு மற்றும் வெறுப்பு தீவிரமாகியுள்ளது. தொடர்புடைய புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவின் 16 பெரிய நகரங்களில், ஆசிய வம்சாவழியினர் மீது வெறுப்புணர்வு மற்றும் குற்றச்செயல், 2019ஆம் ஆண்டில் இருந்ததை விட 2020ஆம் ஆண்டு 149 சதவீதம் உயர்ந்துள்ளது. தொற்றின் தோற்றம் பற்றிய ஆய்வில் அமெரிக்காவின் அரசியல் தந்திரத்தால் விளைவித்த கடும் தீங்கு இதுவாகும். எதிரெதிர் மற்றும் பிரிவினை நிலையை ஏற்படுத்திய இச்செயல், மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயலாகும்.
கோவிட்-19 தோற்றம் குறித்த ஆய்வு, அறிவியல்பூர்வ விடயமாகும். இது, அரசியல் தந்திரத்தால் பாதிக்கப்பட வேண்டாம். மேலும் சீனா மீது அவதூறு பரப்புவதன் மூலம், தொற்றுத் தடுப்பில் தோல்வியடைந்ததற்கான தன்னுடைய பொறுப்புகளை தட்டிக் கழிக்க அமெரிக்கா முயலக் கூடாது. அரசியல் தந்திரம் என்ற தவறான பாதையில் அமெரிக்கா ஊன்றி நின்றால், மனித குலம் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடும் வரலாற்றில் அவமானகரமான பதிவாகி விடும்.