© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
படம் - CFP
2021ஆம் ஆண்டு, திபெத் அமைதியான முறையில் விடுதலை பெற்றதன் 70ஆவது ஆண்டு நிறைவு ஆகும். கடந்த 70 ஆண்டுகளில், சீனாவின் திபெத்தில் பெரும் நல்ல மாற்றம் நிகழ்ந்து, செழிப்பான வளர்ச்சி காணப்படுகிறது.
திபெத்தில் வாழும் பொது மக்களின் எதிர்பார்ப்பு, உலக மக்களின் எதிர்பார்ப்பைப் போன்றதே. அதாவது, அமைதி மற்றும் வசதியான வாழ்க்கை. 70 ஆண்டுகளுக்கு முன்பு, அமைதியான முறையில் விடுதலை பெற்ற திபெத், வரலாற்றில் பெரிய மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம் நிகழ்ந்ததோடு, திபெத் மக்கள் நல்வாழ்வு பெறுவதற்கான தொடக்கப் புள்ளியாகவும் அது அமைந்தது.
2015 முதல் 2020 வரை, திபெத் மக்களின் வருமானம் தொடர்ந்து 6 ஆண்டுகளாக அதிகரித்து, அதிகரிப்பு வேகம் நாடளவில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திபெத்தின் வளர்ச்சி சாதனையை சர்வதேசச் சமூகம் நேரில் காணலாம்.
மேலும் கடந்த 70 ஆண்டுகளில், திபெத்தில் மனித உரிமை இலட்சியம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. திபெத்தில் சீன அரசின் நிர்வாகக் கொள்கை சரியானதாக இருப்பதை அது முழுமையாக நிரூபித்துள்ளது. மேற்கத்திய நாடுகளிலுள்ள சீன எதிர்ப்புச் சக்திகள், மனித உரிமை மற்றும் மதத்தைச் சாக்குப்போக்காக கொண்டு திபெத் விவகாரத்தில் தலையிடுவதற்கு தகுதி இல்லை. 70 ஆண்டுக்காலத்தில், ஒற்றுமை மற்றும் நிலைப்புதன்மை, நன்மை கொண்டு வருவதாகவும், பிரிவினை தீங்கு விளைவிப்பதாகவும் இருக்கும் என்று திபெத் மக்கள் உணர்ந்திருக்கிறனர்.