உலகப் பொருளாதார மீட்சிக்கு அடித்தளம் அமைக்கும் சீனா
2021-08-20 20:01:26

உருமாறிய டெல்டா வைரஸ் உலகளவில் பரவி உள்ளதால், உலகப் பொருளாதார மீட்சியின் முன்னேற்றம் குறிப்பிட்ட அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், சீன அரசு வெளியிட்ட புதிய பொருளாதார புள்ளிவிவரங்கள், பன்னாட்டு சமூகத்தின் கவனத்தை ஈர்க்கிறது.

சீனப் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சியே, உலகப் பொருளாதார மீட்சிக்கு அடித்தளம் அமைக்கும் என்று அறிஞர்கள் பலர் கருதுகின்றனர்.  முதலில், சீனாவில் வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளிநாடுகளில் சீன முதலீடு அதேநேரத்தில் அதிகரித்து வருகிறன. இவ்வாண்டின் முதல் 7 திங்கள் காலங்களில், சீனாவில் நடைமுறைக்கு வந்துள்ள அன்னிய முதலீட்டுத் தொகை 67ஆயிரத்து 219 கோடி யுவான் ஆகப் பதிவாகி, 25.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. உலகின் முதலீட்டை ஈர்க்கும் இடமாக சீனா தொடர்ந்து திகழ்கிறது.

பெருந்தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியைத் தணிக்கும் வகையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், மாபெரும் பொருளாதர ஊக்குவிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்தி உள்ளதால், மொத்த கொள்முதல் பொருட்களின் விலை, பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்த பதிவை உருவாக்கியது. இதனால், உலகளவில் பணவீக்க நெருக்கடி ஏற்படுகிறது.

பெரிய சந்தை அளவு, விடாப்பிடிக்கும் பொருளாதாரத் திறன், துல்லியமான கொள்கை வழிகாட்டல் ஆகியவற்றின் மூலமாக, சீனா பணவீக்கத்தை கட்டுபாட்டிற்குள் வைத்துள்ளதோடு, உலகின் பணவீக்கத்தைத் தணிக்க உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த விரும்பினால், சீனாவை சார்ந்திருக்கும் என்று சில பொருளியலாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

உலகமயமாக்கல் எதிர்ப்பு, பாதுகாப்பு வாதம் போன்ற சாவல்களை எதிர்கொண்ட போதிலும், சீனா தனது கதவை எப்போதும் திறந்து, திறப்பு நிலையை விரிவாக்கி, உலகப் பொருளாதாரம் தொற்றில் இருந்து மீட்சி அடைவதற்கு உந்து சக்தியை ஊட்டும்.