அறிவியலை அரசியல் கட்டுப்படுத்தக் கூடாது
2021-08-25 20:26:24

அமெரிக்க உளவு நிறுவனம் ஆகஸ்டு 24ஆம் நாளுக்குள் கரோனா வைரஸ் தோற்ற ஆய்வை நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்க அரசு முன்பு தெரிவித்தது. இந்த ஆய்வு அறிக்கையின் வெளிப்படையான பதிப்பு அடுத்த சில நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். உளவு நிறுவனம் கரோனா வைரஸ் தோற்றத்தை ஆய்வு செய்வது முற்றிலும் அரசியல் கேலிக்கூத்தாகும்.

வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, அமெரிக்காவின் ஆதிக்கத்தைப் பேணிக்காத்து வருகின்ற உளவு நிறுவனம், அதிக அருவருப்பான சம்பவங்களைச் செய்துள்ளது.

தற்போதுவரை, அமெரிக்க உளவு நிறுவனம் ஊடகங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதன் பொது மக்களின் கருத்துக்களைக் கட்டுப்படுத்தி வருகிறது. அமெரிக்க அரசியல்வாதிகளின் அனுமதியுடன், இந்த நிறுவனம் கரோனா வைரஸ் தோற்றத்தில் சீனாவின் மீது பொய்யாகக் குற்றம் சாட்ட முயன்று வருகின்றது.

அறிவியலை அரசியல் கட்டுப்படுத்தக்கூடாது. இவ்வாண்டின் மார்ச் திங்கள் சீனாவும் உலகச் சுகாதார அமைப்பும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், கரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் தோன்றியிருக்க வாய்ப்பு மிக குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேசச் சமூகம் மற்றும் அறிவியல் துறையினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த முடிவின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

அறிவியல் முறையில் கரோனா வைரஸ் தோற்ற ஆய்வுக்குச் சீனா தொடர்ச்சியாக ஆதரவு அளிக்கும், அமெரிக்க உளவு நிறுவனத்தின் செயலை ஒருபோதும் அனுமதிக்காது.