கதிர்வீச்சு நீரை கடற்பரப்பிற்குள் வெளியேற்ற ஜப்பான் அரசு முடிவு
2021-08-26 16:51:02

சுரங்க பாதை வழியாக, ஜப்பானின் ஃபுகுஷிடா டாய்ச்சி அணு உலை விபத்தில் ஏற்பட்ட கதிர்வீச்சு நீரை கடற்பரப்பிற்குள் வெளியேற்ற ஜப்பான் அரசும் டோக்கியோ மின்னாற்றல் தொழில் நிறுவனமும் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் ஆகஸ்ட் 24-ஆம் நாள் தெரிவித்தன.

அந்த தகவல் உண்மையாக இருந்தால், உள்நாட்டு மற்றும் பிற நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், முழு உலகின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் பொது மக்களின் ஆரோக்கியத்துக்கும் அச்சுறுத்தலாக அமைய ஜப்பான் ஒரு சார்பாக எடுத்து வைக்கும் காலடி இதுவாக அமைந்து விடும். ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் அமைந்துள்ள ஜப்பானின் அண்டை நாடுகளும் உலகில் கடலோர நாடுகளும், ஜப்பானிடம் நஷ்ட ஈடு கோரும் உரிமை உண்டு.

ஜப்பானின் ஃபுகுஷிடா உலையில் கதிர்வீச்சு அகற்றும் பிரச்சினை, முழு உலகின் கடல் உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்புடனும் பல்வேறு நாடுகளின் மக்கள் ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது.

கடல் சட்டம் பற்றிய ஐ.நாவின் பொது ஒப்பந்தம் உள்ளிட்ட சர்வதேசப் பொது ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஜப்பான், தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. சர்வதேச சட்டங்களுக்கான சில நிபுணர்கள் கூறுகையில், ஜப்பானின் கதிர்வீச்சு நீர் வெளியேற்றமானது சுற்றுச்சூழலுக்கு கடும் சீர்குலைவு ஏற்படுத்தினால், தொடர்புடைய நாடுகள், அறிவியல் முறையில் இழப்புகளை மதிப்பீடு செய்து கடல் சூழல் மாசுபாடு மற்றும் உயிரினச் சீரழிவு என்ற பெயரில், ஜப்பானிடம் நஷ்ட ஈடு கோரலாம் என்று தெரிவித்தனர்.