அற்புதமான வளர்ச்சிச் சாதனைகளைச் சீனா பெற்றதன் காரணம் என்ன?
2021-08-27 19:06:31

முன்னென்றும் கண்டிராத வளர்ச்சிச் சாதனைகளைச் சீனா பெற்றுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, சீனா வெற்றிப் பெற்றதன் அடிப்படை காரணமாகும் என்று நைஜீரியா அபுஜா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுத் துறை இயக்குநர் அண்மையில் ஊடகத்தில் கருத்து தெரிவித்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி பொது மக்களுக்குத் தலைமைத் தாங்கி, இந்த அற்புதமான சாதனைகளைப் பெற்றது?சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பரப்புரை துறை அண்மையில் வெளியிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கடமைகள் மற்றும் பங்களிப்புகள் என்னும் ஆவணத்தில் இதற்கான பதலைக் கண்டறிய முடியும்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பொது மக்களுக்குத் தலைமைத் தாங்கி, சீன நிலைமைக்குப் பொருந்திய சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசப் பாதையில் ஊன்றி நின்று வருகிறது. இது தான் சீன வளர்ச்சி வெற்றிப் பெற்றதன் அடிப்படைக் காரணமாகும்.

அத்துடன், உலகச் சூழ்நிலையைச் சரியாக அறிந்து கொள்வது, வளர்ச்சி விதிமுறையைப் பின்பற்றுவது, சான்றுகளிலிருந்து உண்மையைத் தேடுவதில் ஊன்றி நிற்பது ஆகியவையும் மிகவும் முக்கியமானவை.

தற்போது, சீனாவில் குறிப்பிட்ட வசதி படைத்த சமூகம் பன்முகங்களிலும் கட்டியமைக்கப்பட்டுள்ளது. பொது செழிப்பு என்ற இலக்கை நோக்கி சீனா முயற்சி செய்து வருகிறது. பல்வேறு அறைகூவல்களைச் சந்திக்கக்கூடும். ஆனால், சீன மக்களுக்குத் தலைமைத் தாங்கி, இடர்ப்பாடு மற்றும் அறைகூவல்களைச் சமாளித்து, உள்நாடு வளர்ச்சியடைவதோடு உலகத்துக்கும் பங்காற்றும் அனுபவம் மற்றும் திறன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு என்று கடந்த நூற்றாண்டின் வளர்ச்சி எடுத்துக்காட்டியுள்ளது.