சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றித் திறவுகோல் மக்கள் தான்
2021-08-27 10:02:09

நூறு ஆண்டுகால வரலாறுடைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிக்கான திறவுகோல் என்ன என்ற கேள்வி சர்வதேச சமூகத்தின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த கேள்வியாகும். 26ஆம் நாள் சீனா வெளியிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுக் கடமைகள் மற்றும் பங்களிப்புகள் என்ற ஆவணம் இக்கேள்விக்குத் தெளிவாகப் பதிலளித்துள்ளது. மக்களிடமிருந்து, மக்களைச் சார்ந்து, மக்களுக்காகப் பாடுபடுவது அதற்கான திறவுகோலாகும்.  

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி புரியும் சிந்தனைகள், நடைமுறைகள் மற்றும் சாதனைகள் இவ்வாவணத்தில் ஆழமாக விளக்கி கூறப்பட்டுள்ளன. புகழ் பெற்ற சர்வதேச நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில் சீன அரசின் ஆதரவு விதிகம் கடந்த பல ஆண்டுளாக உலகளவில் முதலிடத்தை வகிப்பதற்கான காரணமும் இந்த ஆவணத்தில் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

பிரிட்டன் சமூக அறிவியல் கழகத்தின் அறிஞர் மாட்டின் அல்பரோ கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் மக்களுக்காக சேவை புரிவதில் ஊன்றி நிற்பது அதன் வெற்றி வளர்ச்சியை நனவாக்குவதற்கான திறவுகோல்களில் ஒன்றாகும் என்றார்.

சீனாவின் நபர்வாரி வருமானம் பத்தாயிரம் அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. 40கோடியைத் தாண்டிய உலகின் மிகப் பெரிய

நடுத்தர வருமானமுடையவர்கள் உருவாகியுள்ளனர். அது மட்டுமல்ல, உலகின் மிகப் பெரிய சமூக காப்புறுதி முறை உருவாக்கப்பட்டு உலகில் மிகவும் பாதுகாப்புடன் கூடிய நாடுகளில் ஒன்றாகவும் விளங்கியுள்ளது.

எப்போதும் மக்களை மையமாகக் கொண்டு செயல்படுவது உலகின் மிகப் பெரிய கட்சி வெற்றி பெறுவதற்கான திறவுகோலாகும். மேலும் அருமையான எதிர்காலம் படைப்பதற்கான உந்து ஆற்றலுமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.