அமெரிக்கா தமது ஆய்வகங்களில் புலனாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும்
2021-08-29 19:03:07

கரோனா வைரஸ் தோற்றம் பற்றிய புலனாய்வு அறிக்கையை அமெரிக்காவின் உளவு துறை அண்மையில் வெளியிட்டது. கரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து கசிந்திருப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்திலிருந்து கசிவு என்ற கூற்றில் அமெரிக்கா ஊன்றி நின்றால், நியாயமான கோட்பாட்டைப் பின்பற்றி, தமது நாட்டின் ஐயத்துக்குரிய ஆய்வகங்களில் கரோனா வைரஸ் தோற்றம் பற்றிய புலனாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும்.

கரோனா வைரஸ் தோற்றம் பற்றிய புலனாய்வு, அறிவியல் ரீதியான ஒன்றாகும். பொறுப்பை தட்டிக்கழிக்கும் வழிமுறை அல்ல. பொறுப்பு இல்லாத அமெரிக்கா சீனா மீது பழி கூறி, அரசியல் வைரஸைப் பரவல் செய்து, கரோனா வைரஸ் தடுப்புக்கான உலக ஒத்துழைப்புக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.