உலகிற்கு பங்காற்றி வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சி!
2021-08-29 15:48:53

பெருமையான இலக்கைக் கொண்ட கட்சி சீன கம்யூனிஸ்ட் கட்சியாகும். இவ்விலக்கு, உலகின் முதலிடத்தில் வகிப்பது அல்ல. உலகிற்கு பங்காற்றுவது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கு ஆகும். அண்மையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரைத் துறை வெளியிட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கடமைகள் மற்றும் பங்களிப்புகள் என்ற ஆவணத்தில் இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவசீனா நிறுவிய பிறகு, எந்த போரையும் மோதலையும் ஏற்படுத்தவில்லை. இதர நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை.

மனித குலத்துக்கு பங்காற்றுவதை சொந்த இலக்காக கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி, உலகின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி உலகின் மிக பெரிய வளரும் நாட்டுக்குத் தலைமை தாங்கி, நவீனமயமாக்கத்தை நனவாக்கி வருகின்றது.

அது மட்டுமல்ல, சொந்த வளர்ச்சியின் மூலம், உலகின் வளர்ச்சியை முன்னேற்றி வருகின்றது என்று குறிப்பிட்டுள்ளது.