கரோனா வைரஸ் தோற்றம் பற்றிய அமெரிக்காவின் அறிக்கை கேலிக்கூத்தாக மாறியுள்ளது
2021-08-29 18:31:37

கரோனா வைரஸ் தோற்றம் பற்றி அமெரிக்க உளவு துறை 27ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை தெளிவான முடிவை முன்வைக்கவில்லை. ஆனால் இதற்கு சீனா பொறுப்பு ஏற்க வேண்டும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், சீனா தகவல்களைப் பகிர்வதை மறுத்து, வைரஸ் தோற்றம் பற்றிய சர்வதேச புலனாய்வைப் பாதித்தது என்று பழி கூறியது. வைரஸ் தோற்றம் பற்றிய புலனாய்வை அரசியல்மயமாக்கும் புதிய கேலிக்கூத்து இதுவாகும்.

அமெரிக்காவின் இச்செயல், அறிவியல் எழுச்சிக்கு மதிப்பளிக்காமை மற்றும் உலகம் முழுவதிலுள்ள மக்களின் உயிர் பாதுகாப்புக்கான அலட்சியமாகும்.

வைரஸ் தோற்றத்தைப் புலனாய்வு செய்யும் பணியில், சீன அரசு, அறிவியல் பூர்வாங்க, பொறுப்பான மனப்பான்மையைக் காட்டுவதை உலக மக்கள் கண்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு சீனாவில் இரண்டு முறைகள் புலனாய்வு மேற்கொண்டு தொடர்புடையவரைச் சந்தித்து அனைத்து தேவையான தகவல்களையும் சரிபார்த்துள்ளனர். உலக சுகாதார அமைப்பும் சீனாவும் வெளியிட்ட கூட்டறிக்கையில், புதிய ரக கரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து கசிந்திருப்பதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவு என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகின் அறிவியல் வட்டாரத்தின் பொது ஆதரவையும் ஏற்றுக்கொள்ளலையும் பெற்றுள்ளது.

வைரஸ் தோற்றம் பற்றிய மிக பெரிய ஐயத்துக்குரிய நாடான அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பின் அடுத்த கட்டப் புலனாய்வு பணியில் முக்கிய பகுதியாக மாற வேண்டும். பாதுகாப்பு விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்ட ஃபோர்ட் தெட்ரிக் ஆய்வகம் மற்றும் வட காரோலினா பல்கலைக்கழகத்தில் உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் புலனாய்வு மேற்கொள்வதற்கு அமெரிக்கா அனுமதி அளிக்க வேண்டும் என சீனா வலியுறுத்துகிறது.