உலகம் முழுவதிலும் சிரிக்கப்பட்ட அமெரிக்கா
2021-08-30 15:48:55

அமெரிக்க உளவுத் துறை அண்மையில் புதிய ரக கரோனா வைரஸ் தோற்றம் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் சீனா பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ஆதாரமற்ற முறையில் பழி கூறியுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகை, ஓர் அறிக்கையை வெளியிட்டு, சர்வதேச புலனாய்வுக்குத் தடை ஏற்படுத்தும் வகையில் சீனா மீது அவதூறு கூற முயற்சி செய்துள்ளது.

வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வு அறிவியல் ஆய்வாகும். தனிச்சிறப்பான அறிவியல் பணியாளர்கள் இப்புலனாய்வில் கலந்துகொள்ள வேண்டும்.

ஆனால், இது குறித்து அமெரிக்க உளவு துறை பணியாளர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.

இப்போது, புதிய ரக கரோனா வைரஸ் அடிக்கடி உருமாறி வருகின்றது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நிலைமை இன்னும் மோசமானது. வைரஸ் தோற்றம் பற்றிய புலனாய்வை அரசியலாக்கும் அமெரிக்கா, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியின் தடையாக மாறியுள்ளது. அறிவியலைப் பின்பற்றி, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.