ஆப்கனில் அமெரிக்கப் படை உருவாக்கிய சீற்றங்கள்
2021-08-30 20:04:24

ஆகஸ்ட் 26ஆம் நாளிரவு, ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு அருகில் இரண்டு குண்டு வெடிப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமுற்றனர்.

இச்சம்பவத்தில் காயமுற்ற சிலரும் நேரில் கண்டவர்களும் சீன ஊடக குழுமத்தின் செய்தியாளருக்கு 29ஆம் நாள் பேட்டி அளித்தனர். அப்போது அன்றைய வெடிப்புக்கு பின் அமெரிக்கப் படை பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி. காபூல் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பாதைகளை மூடியது. இதனால் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் நீண்ட நேரமாக சிகிச்சை அளிக்கப்படாமல் உயிரிழந்தனர். பிபிசி செய்தி இதை உறுதிப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

20 ஆண்டுகளுக்கு  முன், பயங்கரவாத எதிர்ப்பை சாக்குப்போக்காக கொண்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு படையை அனுப்பியது. அப்போது முதல், போரினால் தேசப்பட்ட இந்நாட்டில் துன்பமிக்க சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. புள்ளி விவரங்களின் படி, கடந்த 20 ஆண்டுகளில், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளில் ஆப்கனில் சுமார் ஒரு லட்சத்துக்கு அதிகமான பொது மக்கள் உயிரிழந்தனர். சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர் ஆதரவற்றோர்களாயினர்.

ஆப்கனில் அமெரிக்கா உருவாக்கிய மனித நேய சீற்றங்கள், நீண்டகாலமாக மனித உரிமை துறையில் அமெரிக்கா நடைமுறைப்படுத்தி வரும் இரட்டை வரையறையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன.