கரோனை வைரஸ் பரவல் தடுப்புக்கு தடைகல்லாக விளங்கும் அமெரிக்க அரசியல் வைரஸ்
2021-08-31 19:27:00

அமெரிக்க உளவு துறை அண்மையில் புதிய ரக கரோனா வைரஸ் தோற்றம் பற்றிய அறிக்கையை வெளியிட்டது. இதில் சீனா தொடர்புடைய சர்வதேச புலனாய்வுக்கு தடைகல் ஏற்படுத்துவதாக அமெரிக்கா பழி கூறி, சர்வதேச சமூகம் சீனா மீது “அரசியல் நிர்ப்பந்தம்” திணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. “அரசியல் வைரஸை” தெள்ளத்தெளிவாக பரவல் செய்யும் அமெரிக்காவின் இச்செயல், கரோனா வைரஸ் தடுப்புக்கான பன்னாட்டு ஒத்துழைப்புக்கும் கரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வுக்கும் கடும் சீர்குலைப்பை ஏற்படுத்தி வருகிறது.

உலகில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பில் தோல்வியடைந்த அமெரிக்காவுக்கு சர்வதேச சமூகத்தைப் பிரதிநிதிப்படுத்தும் தகுநிலை உண்டா? அண்மையில் 80க்கும் அதிகமான நாடுகள் உலக சுகாதார அமைப்பின் பொது செயலாளருக்கு கடிதம் எழுதி அல்லது அறிக்கையை வெளியிட்டு, வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வை அரசியல்மயமாக்குவதை எதிர்த்தன. நூற்றுக்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 300க்கும் அதிகமான அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் சிந்தனை கிடங்குகள், உலக சுகாதார அமைப்பின் செயலகத்துக்கு ஒப்படைத்த கூட்டு அறிக்கை ஒன்றில், வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வை அரசியல்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இது சர்வதேச சமூகத்தின் பொது கருத்தாகும்.

அரசியல் வழிமுறையில் வைரஸ் தோற்றத்தை ஆய்வு செய்யும் அமெரிக்கா, வைரஸ் தடுப்புக்கான பன்னாட்டு முயற்சிகளுக்கும், வைரஸ் தோற்றம் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வுக்கும் தடைகலாக மாறியுள்ளது என்று உண்மைகள் நிரூபித்துள்ளன. சர்வதேச சமூகம் கையோடு கைகோர்த்து, கரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வு அறிவியல் ரீதியான பாதைக்குத் திரும்புவதை முன்னேற்ற வேண்டும்.