அமெரிக்கா தன் அரசியல் கேலிக்கூத்தை நிறுத்தி கொள்ள வேண்டும்!
2021-09-01 18:47:37

“கரோனா வைரஸ் தோற்றம்” குறித்து மூன்று மாத ஆய்வுக்குப் பின், அமெரிக்க உளவு துறை அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், “இருக்கலாம்”, “வாய்ப்புள்ளது” போன்ற சொற்கள் அதிகம் உள்ளன. உறுதியாக எதையும் சொல்லவில்லை என்று பிறர் எள்ளி நகையாடும் வகையில் உள்ளது. ஆனால், அமெரிக்க உளவு துறையும் வெள்ளை மாளிகையும் தங்களது பொறுப்பைப் பொருட்படுத்தாமல், சீனா மீது தொடர்ந்து பழி கூறி வருகின்றன. இந்த அறிக்கை, அரசியல் ரீதியான தோற்ற ஆய்வின் வெளிப்பாடு தான். இதில் அறிவியல் தன்மை மற்றும் நம்பகத்தக்க முற்றிலும் பூஜியமாக உள்ளது.

கரோனா வைரஸ் பரவலில் அமெரிக்க மக்கள் சிக்கியுள்ள நிலையில், தோற்ற ஆய்வை அரசியல்மயமாக்குவதனால் அமெரிக்க அரசியல்வாதிகள், சர்வதேச சமூகத்தின் கண்டனத்தை பெற்று வருகின்றனர். அவர்கள் கரோனா வைரஸ் தடுப்பு, நோயாளிகள் மீட்புப் பணி, அறிவியல் ரீதியாக தோற்ற ஆய்வு மேற்கொள்ளும் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.