வைரஸ் தோற்ற ஆய்வில் அமெரிக்கா அறிவியல் ரீதியாக ஈடுபட வேண்டும்
2021-09-03 19:59:25

அமெரிக்காவின் உளவுத் துறை அண்மையில் கரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டு, சீனா சர்வதேச புலனாய்வுக்கு தடை ஏற்படுத்தியுள்ளதாக பழி கூறியது. இது உண்மைக்குப் புறம்பானது. வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வுப் பணியில் சீனா காட்டியுள்ள வெளிப்படையான அறிவியல் ரீதியான ஒத்துழைப்பு மனப்பான்மையை முழு உலகமும் அறியும்.

கரோனா வைரஸ் பரவிய பிறகு, உலகளவில் அறிவியல் ரீதியான வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வுக்கு சீனா பெரும் ஆதரவு அளித்து வருகிறது. சீனாவுக்கு வந்து, வைரஸ் தோற்றம் பற்றி ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பின் நிபுணர்களுக்கு சீனா இரண்டு முறைகள் அழைப்பு விடுத்தது. வெளிப்படையான முழுமையான ஆய்வு மூலம், உலக சுகாதார அமைப்பு மற்றும் சீனத் தரப்பு கூட்டு ஆய்வுக்குழு இவ்வாண்டின் மார்ச் திங்கள் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் ஆய்வகத்திலிருந்து புதிய ரக கரோனா வைரஸ் கசித்திருந்ததற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவு என்று சுட்டிக்காட்டப்பட்டது. இது சர்வதேச அறிவியல் துறையினரின் பரந்துபட்ட ஏற்றுக்கொள்ளலைப் பெற்றுள்ளது.

அறிவியல் ரீதியான வைரஸ் தோற்ற ஆய்வுக்கு சீனா ஆதரவளிப்பதை தவிர, வைரஸ் பரவல் தடுப்புக்கான பன்னாட்டு ஒத்துழைப்புக்கு சீனா இயன்ற அளவில் பங்காற்றி வருகிறது. எடுத்துக்காட்டாக, 100க்கும் அதிகமான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு சீனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. அதோடு, 60க்கும் அதிகமான நாடுகளுக்கு 80 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகளை சீனா ஏற்றுமதி செய்துள்ளது.

அமெரிக்காவைப் பார்க்கலாம். அமெரிக்கா அதிகப்படியான கரோனா தடுப்பூசிகளை சேமித்து, தடுப்பூசி மூலப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இது மனித நேய எழுச்சிக்கு புறம்பானது.

சர்வதேச சமூகத்தின் நியாயமான வேண்டுகோளை அமெரிக்க அரசியல்வாதிகள் கருத்தில் கொண்டு, அறிவியல் ரீதியாக வைரஸ் தோற்றம் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் பாதைக்குத் திரும்பி, சர்வதேச புலனாய்வுக்கு ஒத்துழைப்பு நற்க வேண்டும்.