உலக வர்த்தக மீட்சியை முன்னேற்றும் சீனாவிற்கான புதிய வாய்ப்பு
2021-09-03 17:27:29

செப்டம்பர் 2ஆம் நாளிரவு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2021ஆம் ஆண்டு சீன சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சியின் உச்சி மாநாட்டில் காணொலி மூலம் உரை நிகழ்த்தி, சீனாவின் சேவை வர்த்தக வளர்ச்சிக்கான சில புதிய நடவடிக்கைகளை அறிவித்தார். அவர் கூறுகையில், சீனா பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, திறப்பு மற்றும் ஒத்துழைப்பை நிலைநிறுத்தி, கூட்டு நலன் மற்றும் வெற்றி பெற்று, சேவை வர்த்தக வளர்ச்சி வாய்ப்பைக் கூட்டாகப் பகிர்ந்து கொண்டு, உலகப் பொருளாதார மீட்சியையும் அதிகரிப்பையும் கூட்டாக முன்னேற்ற விரும்புகிறது என்று தெரிவித்தார். திறப்பை சீனா தொடர்ந்து விரிவாக்கும் தெளிவான சமிக்கையை இது காட்டுகிறது. இது, உலக சேவை வர்த்தக மீட்சிக்கு புதிய வாய்ப்பை உருவாக்குவதோடு, உலகப் பொருளாதார சிக்கலைத் தீர்ப்பதற்கு வழிமுறையையும் வழங்குகிறது.