அமெரிக்காவில் கரோனா வைரஸ் தோற்றம் எங்கே?
2021-09-04 19:59:25

2020ஆம் ஜனவரி திங்களில், அமெரிக்காவில் கரோனா தொற்று பரவலின் மீது அந்நாட்டு மருத்துவர் ஹெலன் ஓய் சூ எச்சரிக்கையை முன்வைத்துள்ளார். ஆனால், அதிகார வட்டாரத்தால் இதனை பிறரைத் தெரிவிக்கக் கூடாது என்று அவர் கட்டாயப்படுத்தப்பட்டார்.

தவிரவும், அமெரிக்க ஊடகம் வெளியிட்ட செய்தியின்படி, புளோரிடா மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரியில் கரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட அல்லது பரிசோதனையில் நேர்மறை கண்டறியப்பட்ட 171 பேரின் தரவுகள் அதே ஆண்டின் மே திங்களில் நீக்கப்பட்டிருந்தன. அதைப் போன்று ஜனவரி திங்களில் அமெரிக்க தேசிய சுகாதார ஆய்வகம் சேகரித்த மனிதர் ரத்த மாதிரியில் கரோனா வைரஸ் எதிர்ப்பாற்றல் கண்டறியப்பட்ட பிறகு, இது சீனா மீதான கரோனா தொற்று ஆய்வுப் பணியைப் பாதித்து, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கும் தீங்கு விளைவிக்கும் என்ற காரணத்தால் இந்த ஆய்வு திட்டத்தை நிறுத்துமாறு அமெரிக்க அரசு கட்டளையிட்டுள்ளது. இந்தக் கட்டளையின்படி, 2020ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் நாளுக்கு முந்தைய ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட கூடாது.

மனித குலத்தின் உடல் நலத்துடன் தொடர்புடைய வைரஸ் தொற்று ஆய்வுப் பிரச்சினையில், உண்மைகள் என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா சரியான முறையில் பதில் அளிக்க வேண்டும்.