காலநிலை மாற்றப் பிரச்சினையில் சீன மற்றும் அமெரிக்க ஒத்துழைப்பு
2021-09-06 20:18:05

காலநிலை பிரச்சினைக்கான அமெரிக்க அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் கெர்ரி அண்மையில், சீனாவில் பயணம் மேற்கொண்டார். அப்போது, காலநிலை மாற்ற ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சீனாவும் அமெரிக்காவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன.

எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் வேகத்தைச் சீனா உயர்த்த வேண்டும் என்று கெர்ரி விருப்பம் தெரிவித்தார். பசுங்கூட வாயு வெளியேற்றத்தை மாபெரும் அளவில் குறைக்கும் திட்டத்தை வாஷிங்டன் அறிவித்து, வளரும் நாடுகளுக்கு தூய்மை தொழில் நுட்பம் உள்ளிட்ட ஆதரவுகளை வழங்க வேண்டும் என்று சீனா விருப்பம் தெரிவித்தது.

எப்படி நடத்தாலும், காலநிலை மாற்றத்துக்கான சீனா-அமெரிக்க ஒத்துழைப்பு, பாரிஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

தற்போது, காலநிலை மாற்றம், தொற்றுநோய் கட்டுப்பாடு முதலிய முக்கிய சர்வதேச மற்றும் பிரதேசங்களின் பிரச்சினைகளில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் ஒத்துழைப்பு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இந்த ஒத்துழைப்பு ஒன்றுக்கு ஒன்று நலன் தர வேண்டும். சீனாவின் நலன்களுக்கு அமெரிக்கா தீங்கு விளைவிக்கும் அதே வேளையில், சீனா நிபந்தனையின்றி ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் விருப்பம் நியாயமற்றதாகும்.