2021 சீனச் சர்வதேசச் சேவை வர்த்தகப் பொருட்காட்சியின் கனிகள்
2021-09-07 21:09:48

2021 சீனச் சர்வதேசச் சேவை வர்த்தகப் பொருட்காட்சி 7ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நிறைவடைந்தது. இதில் எட்டப்பட்ட ஒப்பந்த எண்ணிக்கைகளும் வர்த்தக மதிப்பும் கடந்தப் பொருட்காட்சியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

டெலோய்ட் சீனா நிறுவனத்தின் துணை இயக்குநர் யாங் யிங் சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளரிடம் கூறுகையில், உலகளவில் கரோனா தொற்று பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தாத சூழலில், இப்பொருட்காட்சி எண்ணியல் நுட்பத்தைக் கொண்டு இணையம் மற்றும் நேரடி முறையில் நடத்தப்பட்டது. பொருளாதாரத்தின் எண்ணியல் மயமாக்கம், இணையமயமாக்கம் மற்றும் நுண்ணறிவு மயமாக்கத்தின் மாபெரும் உள்ளார்ந்த ஆற்றலை இது சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

பிலிப்பைன்ஸ், கம்போடியா, எஸ்டோனியா உள்ளிட்ட பல வளரும் நாடுகளின் தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டு புதிய வணிக வாய்ப்புகளைக் கண்டறிந்தன. மேலும், சேவை வர்த்தகத் துறையின் வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்தல், உலகப் பொருளாதார மீட்சியையும் வளர்ச்சியையும் முன்னேற்றும் 4 நடவடிக்கைகள் ஆகியவற்றைச் சீனா இப்பொருட்காட்சியில் முன்வைத்தது உலகிற்கு ஊக்கம் அளித்துள்ள அதேவேளையில், உலகக் கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறும் சீனாவின் விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.