பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அமெரிக்காவின் வரையறை சரியா?
2021-09-08 20:36:04

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அமெரிக்காவின் வரையறை சரியா?_fororder_rBABC2E4R7eAXfwRAAAAAAAAAAA621.3508x2616.960x716

செப்டெம்பர் 11 பயங்கரவாத தாக்குதல் நிகழ்வின் 20ஆவது ஆண்டு நிறைவுக்கு முன், அமெரிக்கப் படை அவசரமாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ளது. கடந்த ஆண்டுகளில் உலகளவில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறையாமல் தீவிரமாகி வந்துள்ளன. 20 ஆண்டு காலம், 2 இலட்ச கோடி டாலர், 20 ஆயிரத்துக்கும் மேலான அமெரிக்க படையினரின் உயிர் இழப்பு ஆகியவற்றைச் செலவிட்ட இந்த பயங்கரவாத எதிர்ப்புப் போர் தோல்வியுடன் முடிவடைந்ததற்குக் காரணம் என்ன?

பயங்கரவாத எதிர்ப்பில் அமெரிக்கா முற்றிலும் சொந்த நலன்களின் அடிப்படையில் செயல்பட்டு, இதர நாடுகள் மற்றும் பிரதேசங்களின் கோரிக்கைகளை ஒன்றும் கேட்காமல் அதேவேளையில், பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை மதிப்பிடுவதிலும் வேறுபட்ட வரையறைகளைக் கொண்டு வருகிறது. இதுதான் ஆப்கன் போரின் தோல்விக்கான முக்கிய காரணம் என்று பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பயங்கரவாத்த்தை ஒடுக்குவதில் இரட்டை வரையறைகளைப் பயன்படுத்துவது பயங்கரவாதத்தின் பரவலுக்குத் துணை புரிந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.