ஷி ச்சின்பிங்-பைடன் தொடர்பு
2021-09-10 20:36:43

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனுடன் வெள்ளிக்கிழமை காலையில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இரு நாட்டுறவு மற்றும் பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் பற்றி பரிமாற்றம் செய்தார்.

சீன அமெரிக்க உறவானது சிறப்பாக தேர்வு செய்யப்பட வேண்டிய கேள்வி அல்ல. மாறாக சிறப்பாக பதில் அளிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்று ஷி ச்சின்பிங் கூறியது உலக மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளது.

தற்போது சீன-அமெரிக்க உறவு முன்பு கண்டிராத சிக்கலுக்குள்ளாகியதற்கு காரணம், அமெரிக்கா சீனாவின் மீது நெடுநோக்கு தன்மையில் தவறான மதிப்பீடு செய்ததாகும். இரு நாட்டுறவை மேம்படுத்த, அமெரிக்கா சீனாவைத் தனது அச்சுறுத்தல் மற்றும் எதிரியாகக் கருதக் கூடாது.

உலக மக்களால் வரவேற்கத்தக்க செய்தியாக, நடப்புத் தொலைபேசி தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் ஒத்துழைப்புக்கான விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர். சீரான சீன-அமெரிக்க உறவு உலகம் முன்னேறும் போக்கிற்குப் பொருந்தியது.