ஷிச்சின்பிங்கின் முன்மொழிவுகள் பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கு உந்து சக்தி
2021-09-10 17:17:12

செப்டம்பர் 9ஆம் நாள் நடைபெற்ற பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 13ஆவது கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பயன்தரும் ஒத்துழைப்பு குறித்து ஊன்றி நிற்க வேண்டிய 5 அம்ச முன்மொழிவுகளை முன்வைத்தார்.

உண்மையான பலதரப்புவாதத்தைச் செயல்படுத்துவது, நோய் தடுப்புக்கான உலக ஒத்துழைப்பை முன்னேற்றுவது, புத்தாக்க வளர்ச்சியைத் தூண்டுவது, கூட்டு வளர்ச்சி பெறுவது முதலிய சர்வதேசப் பொறுப்புகளை ஏற்பதற்கு, இம்முன்மொழிவுகள், உந்து சக்தியை ஊட்டியுள்ளன.

இது குறித்து இந்தியாவின் ஜெஎன்யூ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தீபக் கூறுகையில், பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு, பலதரப்புவாதத்துக்கான முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று தெரிவித்தார்.