20 ஆண்டுக்குப் பிறகு தொடக்க புள்ளிக்கு மீண்டும் வந்து விட்டது அமெரிக்கா
2021-09-11 19:45:26

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி, அமெரிக்காவில் வரலாறு காணாத மிகக் கடுமையான பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து,  பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில், அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் போர் தொடுத்து, தலிபான் ஆட்சியை வீழ்த்தியது. தற்போது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு,  அமெரிக்காவின் வரலாற்றில் நீடித்த மிக நீண்டக்காலப் போர் முடிவுக்கு வந்தது. அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் இருந்து படையை அவசரமாக வெளியேற்றியதோடு,  தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதை எதிர்கொள்ள நேரிட்டது.

20 ஆண்டுக்குப் பிறகு தொடக்க புள்ளிக்கு மீண்டும் வந்து விட்டது அமெரிக்கா_fororder_1

பயங்கரவாத எதிர்ப்பு நோக்குடன், அமெரிக்கா இந்த போர் தொடுத்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில், ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் எண்ணிக்கை குறையவில்லை. மாறாக, அது அதிகரித்துள்ளது. கூடுதலாக, இந்த போரின் விளைவாக, பெரும் மனித நேய பேரிடர் ஏற்பட்டது. அமெரிக்க படையின் நடவடிக்கைகளால், ஆப்கானில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். 60ஆயிரம் மக்கள் காயமடைந்தனர். மேலும், 1.1கோடி மக்கள்  அகதிகளாக மாறியுள்ளனர்.

20 ஆண்டுக்குப் பிறகு தொடக்க புள்ளிக்கு மீண்டும் வந்து விட்டது அமெரிக்கா_fororder_2

ஆப்கான் போர் காலங்களில்,  4 பேர் அரசுத் தலைவராக மாறி மாறி பதவியேற்றினர். அவர்கள், வேற்றுமையில் ஆப்கான் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினர்.  2002ஆம் ஆண்டு அப்போது அரசுத் தலைவராக பதவியேற்ற ஜார்ஜ் வாக்கர் புஷ் வாக்குறுதி அளிக்கையில்,  ஆப்கானிஸ்தான் மறுசீரமைப்புக்கான ஒத்துழைப்புக் கூட்டாளியாக இருப்போம் என்று கூறினார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் பேசுகையில்,  நாட்டுக் கட்டுமானம், ஆப்கானில் அமெரிக்காவின் கடமை எப்போதும் அல்ல என்று உறுதியுடன் கூறினார்.

20 ஆண்டுக்குப் பிறகு தொடக்க புள்ளிக்கு மீண்டும் வந்து விட்டது அமெரிக்கா_fororder_3

சொந்த நாட்டின் நலன்களைக் காக்கவே, அமெரிக்கா ஆப்கானில் பயங்கரவாத எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளது. ஆனால், 20 ஆண்டுகளில்,  ஆப்கானில் “ஜனநாயக சீரமைப்புக்காக” 2லட்சம் கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமாக  செலவிடப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படை அவசரமாக ஆப்கானில் இருந்து வெளியேற நேரிட்டது.

20 ஆண்டுக்குப் பிறகு தொடக்க புள்ளிக்கு மீண்டும் வந்து விட்டது அமெரிக்கா_fororder_4

ஆப்கான்  மட்டுமல்லாமல், ஈராக், சிரியா ஆகிய நாடுகள், அமெரிக்காவின் ”ஜனநாயக சீரமைப்பில்” சிக்கியுள்ளன. 2003ஆம் ஆண்டு,  பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்கள் இருப்பது என்ற பெயரில், அமெரிக்கா ஈராக் மீது போர் நடத்தியது. 2011ஆம் ஆண்டு முதல், சிரியா நெருக்கடி ஏற்பட்ட பிறகு,  அமெரிக்கா இடைவிடாமல், சிரியாவில் அரசு எதிர்ப்பு சக்திகளை தூண்டி,  சிரியாவின் உள்விவகாரங்களில் தலையிட்டுள்ளது.

20 ஆண்டுக்குப் பிறகு தொடக்க புள்ளிக்கு மீண்டும் வந்து விட்டது அமெரிக்கா_fororder_5

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன்  பதவியேற்றதும் அமெரிக்கா திரும்புகிறது என்று கூறினார். அமெரிக்கா திரும்பியுள்ளது என்பது உண்மை. ஆனால், 20 ஆண்டுகளாக நீடித்த பயங்கரவாத எதிர்ப்புப் போருக்கு பிறகு, அமெரிக்கா மீண்டும் தொடக்க புள்ளிக்கு வந்து விட்டது.

20 ஆண்டுக்குப் பிறகு தொடக்க புள்ளிக்கு மீண்டும் வந்து விட்டது அமெரிக்கா_fororder_6