அதிக ஆவலுடன் போர் தொடுத்து வரும் அமெரிக்கா
2021-09-13 20:59:29

240 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடைய நாடான அமெரிக்கா, 200 க்கும் அதிகமான முறை போர் தொடுத்தது அல்லது போரில் கலந்து கொண்டது. 1945 ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை மட்டும், உலகின் 153 பகுதிகளில் நிகழ்ந்த 248 ஆயுத மோதல்களில், அமெரிக்காவுக்கு 201 பங்கு உள்ளது. உலகில் போரிடுவதில் மிக அதிக ஆர்வம் கொண்ட நாடு அமெரிக்கா தான் என்பதில் ஐயமில்லை. தனது மேலாதிக்கத்தைப் பேணிக்காக்கும் வகையில், அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர்,  பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு பிற நாட்டின் ஆட்சியை கவிழ்த்துவதற்காக ராணுவ வழிவைத் தேர்வு செய்கின்றனர்.

மறுபுறம்,  அதிக ஆவலுடன்  போர் தொடுக்கும் அமெரிக்கா, பொருளாதார நலன்களைப் பெறும் வகையில் இருக்கும். பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் ரோட்ரிகோ டுட்டார்டே 2019ஆம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவில், போர் எப்போதும் நீடிக்கும் என்று அமெரிக்கா விரும்புகிறது. இதனால், பிற நாடுகள், அமெரிக்காவின் விமானங்கள், ராணுவக் கப்பல்கள் உள்ளிட்டவற்றை வாங்கும். போர் முடிவுக்கு வந்தால்,  அமெரிக்காவில் பலர் வேலையை இழப்பார்கள். இந்த கூற்று, உண்மை தான்.

கூடுதலாக,  அமெரிக்கா, தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு பிற நாடுகளை மாற்றி அமைக்க முயல்கிறது. ஜனநாயக ஆட்சியை கட்டாயமாக செயல்படுத்தியதால், ஆனால், அனைத்தும் இறுதியில் தோல்வியடைந்தது. அது, உள்ளூர் மக்களுக்கு கடும் பேரிடரை ஏற்படுத்தியது. 20 ஆண்டுகளில்,  அமெரிக்கா, உலகின் 85 நாடுகளில் போர் தொடுத்ததிலும், ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதிலும் 9 லட்சத்து 29ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

ஐ.நா. தலைமைச் செயலாளர் குட்ரேஸ் சமீபத்தில் பேசுகையில், உலகின் பல இடங்களில் ஏற்பட்ட நிலைமையைக் கருத்தில் கொண்டு,  பயங்கரவாதம் பரவி வருவது குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன் என்று தெரிவித்தார். அமெரிக்கா கடந்த 20 ஆண்டுகளில் பயங்கரவாத எதிர்ப்பு போரில் ஈடுபட்டதன் விளைவை இந்த கருத்து எடுத்துக்காட்டுகிறது.