உலகப் பொருளாதார அதிகரிப்புக்கான ஆதாரமாக திகழ்கிறது சீனா
2021-09-15 20:09:33

சீன அரசு 15ஆம் நாள் புதன்கிழமை ஆகஸ்டு மாதப் பொருளாதார புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, ஆகஸ்டு திங்களில் சீனப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த குறியீடுகள் இயல்பான வரம்புக்குள் இருக்கிறது. பொருளாதார மீட்சி அடைந்து வரும் போக்கு தொடர்கிறது.

கடந்த சில காலங்களில், உலகளவில் மீண்டும் கோவிட்-19 தொற்று பரவலால், சந்தையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால், உற்பத்தித் தொழில் மற்றும் சேவை தொழில் தொடர்பான தரவுகளை ஆய்வு செய்து, சீனப் பொருளாதார வளர்ச்சியில், தொழில்நுட்பம் மற்றும் தொழிலாக்கம் காணப்பட்டுள்ளது. இந்த மேம்பாடு, பொருளாதார மீட்சிக்கு வலுவான ஆதரவு அளிக்கும்.

ஒட்டுமொத்த கொள்கைகள், தொழில் புரிவதற்கான சூழல் மேம்பாடு, அறிவியல் தொழில்நுட்பங்களின் புத்தாக்கம் போன்ற சாதகமான காரணிகள், சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ச்சியான உந்து சக்திகளை கொண்டு வருகிறது.

மறுப்புறம்,  வெளிநாடுகளுக்கு சீனா தனது திறப்பு நிலையை விரிவாக்கி வருவதுடன், சீனா, அன்னிய முதலீடு செய்வதற்கு உகந்த இடங்களின் பட்டியில் தொடர்ந்து வகிக்கிறது. இவ்வாண்டு முதல் 7 தங்களில், சீனாவில் நடைமுறையில் இருந்த அன்னிய முதலீட்டுத் தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 25.5 சதவீதம் அதிகம். அதேவேளையில், சீனச் சந்தை, உலகின் முதலீட்டாளர்கள் இலாபம் பெறும் அரிய வாய்ப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பிற நாடுகளுடன் ஒட்டுப்பிடும் போது,  கோவிட்-19 தொற்றின் பாதிப்பைச் சமாளிப்பதில் சீனப் பொருளாதாரம் சக்திமிக்க செயல்திறனை வெளிக்காட்டுகிறது. இந்நிலையில் உலகப் பொருளாதார அதிகரிப்பைத் தூண்டும் தனிச்சிறப்பான ஆதாரமாக  சீனா மாறியுள்ளது என்று ப்ளாக்ராக் சொத்து மேலாண்மை நிறுவனம் வெளியிட்ட உலக முதலீட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது