பிராந்திய மற்றும் உலகின் வளர்ச்சிக்கு நன்மை தரும் சீனா – ஆசியான் இடையேயான பயனுள்ள ஒத்துழைப்பு
2021-09-16 20:08:21

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ செப்டம்பர் 15ஆம் நாள் அண்டை நாடுகளில் பயணத்தை நிறைவு செய்தார். இப்பயணத்தில்,  வியட்நாம், கம்போடியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளில் மேற்கொண்ட பயணமானது, மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. அரசியல் நம்பிக்கையை மேம்படுத்துதல், கோவிட்-19 தொற்று தடுப்பு மற்றும் பொருளாதாரத்துக்கான ஒத்துழைப்பு ஆகிய  கோணங்களில் இருந்து பார்த்தால்,  இந்த பயணம்,  சீனாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையேயான வலுவான ஒத்துழைப்பு நிலையை வெளிக்காட்டுகிறது.  இந்த ஒத்துழைப்பு, வெளிப்புறங்களில் இருந்து வரும் தலையீடு மற்றும் சீர்குலைத்தலைத் தடுக்கவும், பிராந்திய அமைதி மற்றும் நிலைப்புதன்மையைப் பாதுக்காக்க முடியும்.

உண்மையில், இந்தப் பிராந்தியத்தைச் சாரா சில நாடுகள், தென்சீன கடல் பிரச்சினையின் மூலமாக முரண்பாடுகளை ஏற்படுத்தி செயல்பட்டு வருகின்றன. இந்நிலையை எதிர்கொண்டு ஆசியான் நாடுகள் பொதுவாக கருதுவதாவது:

பெரிய நாடுகளுடனான உறவை சரியாகக் கையாண்டு, வெளிப்புறச் சக்தியின் கட்டுப்பாட்டைத் தவிர்ப்பது பகுத்தறிவு வாய்ந்த தெரிவு ஆகும். அது,  பிராந்தியத்தின் நலன்களுக்குப் பொருத்தமாகவும் உள்ளது.

அண்டை நாடுகளாக விளங்கும் சீனா, தென்கிழாக்காசிய நாடுகள் ஆகியவற்றுக்கு இடையே நெருங்கிய தொடர்பு உருவாக்கப்பட்டுள்ளது.  ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்து, வேற்றுமையில் ஒற்றுமை காணும் அடிப்படையில், உரிய முறையில் கருத்து வேறுபாடுகளைக் களையவும் ஒத்துழைப்பை ஆழமாக்கவும் முடியும். சீனா- ஆசியான் இடையேயான பயனுள்ள ஒத்துழைப்பு,  பிராந்திய மற்றும் உலகின் வளர்ச்சிக்கு அதிக நேர்மையான சக்தியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கின்றோம்.