ஆப்கான் பிரச்சினைக்கு திசை காட்டும் சீன முன்மொழிவு
2021-09-18 19:03:10

ஆப்கான் விவகாரம் பற்றி 17ஆம் நாள் நடைபெற்ற உச்சிமாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் காணொளி வழியாக கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்திய போது, ஆப்கான் பிரச்சினையை அரசியல் முறையில் தீர்ப்பதற்கு மூன்று அம்ச முன்மொழவை வழங்கினார். இது, உள்நாட்டு ஒழுங்கின் மீட்பு பற்றிய ஆப்கான் மக்களின் பொது விருப்பத்துக்கும் சர்வதேச சமூகத்தின் பொது அக்கறைக்கும் பொருந்தியதுடன், யதார்த்தம், தொலைநோக்கு மற்றும் பன்முகத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஆப்கான் நிலைமை மாற்றம், சர்வதேச மற்றும் பிரதேச பயங்கரவாத எதிர்ப்புக்கு சிக்கலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆப்கான் தரப்பு உள்நாட்டிலுள்ள பயங்கரவாத அமைப்புகளை உறுதியுடன் ஒடுக்க வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. அதோடு, ஆப்கானின் பல்வேறு தரப்புகளுடன் பரிமாற்றம் மேற்கொண்டு, அது மேலும் திறந்த மற்றும் உள்ளடக்கும் தன்மையுடன் கூடிய அரசியல் கட்டமைப்பை உருவாக்க வழிவகுக்க வேண்டும் என்றும் சீனா ஆலோசனை வழங்கியுள்ளது.

தவிரவும், ஆப்கான் மக்கள் இன்னல்களைச் சமாளிக்க, பல்வேறு தரப்புகளும் பொறுப்பேற்க வேண்டும். இதற்கென, ஆப்கானுக்கு தடுப்பூசி மற்றும் அவசர உதவிப் பொருட்களை நன்கொடையாக வழங்க சீனா திட்டமிட்டுள்ளது. ஆப்கான் மக்கள் சொந்த தாயகத்தை மீண்டும் கட்டியமைக்க உதவியளிப்பதில் சீனாவின் நேர்மை மற்றும் நல்லெண்ணத்தை இது வெளிக்காட்டியுள்ளது.

இதனிடையே, குறிப்பிட்ட சில நாடுகள் படிப்பினையைப் பெற்று, ஆப்கானின் எதிர்கால வளர்சிக்கு தகுந்த பொறுப்பேற்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியது.