ஷிச்சின்பிங்கின் உரைக்கு சர்வதேச சமூகம் பாராட்டு
2021-09-18 19:35:18

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் 21ஆவது உச்சி மாநாட்டில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கில் இருந்து காணொளி மூலம் பங்கேற்று முக்கிய உரை நிகழ்த்தினார். ஷிச்சின்பிங்கின் உரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வளர்ச்சியின் புதிய பயணத்தைத் தொடங்குவதற்கும், நீடித்த உலக அமைதி மற்றும் பொதுவான செழிப்பை முன்னேற்றுவதற்கும் துணை புரியும் என்று சர்வதேச சமூகம் பொதுவாக கருத்துத் தெரிவித்துள்ளது.

புதிய ரக கரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவது தற்போது மிக அவசரப் பணியாகும். ஆண்டு முழுவதும் உலகத்துக்கு 200 கோடி தடுப்பூசிகளை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் விரைவாக நனவாக்கப்படுவதை ஷிச்சின்பிங் அறிவித்தார். தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் சீனா முக்கிய பங்களிப்பாளர் என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானின் சூழ்நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால், அனைத்து உறுப்பு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்துமாறு ஷிச்சின்பிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதேச பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கு இது மிகவும் முக்கியமானது.

சர்வதேச பிரச்சினைகளை தீர்க்க, விரிவான கலந்தாய்வு, கூட்டு கட்டுமானம், பயன்களின் பகிர்வு ஆகிய கோட்பாட்டை பின்பற்ற வேண்டும். இது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் சர்வதேச சமூகம் பலதரப்புவாதத்தை செயல்படுத்துவதற்கும், உலக நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் துணை புரியும் என்றும் அவர் கூறினார்.