ஐரோப்பா நெடுநோக்கு தன்னாட்சியைப் பெற வேண்டும்
2021-09-18 20:45:00

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான தனது தூதர்களை திரும்ப அழைப்பதாக பிரான்ஸ் 17ஆம் நாளிரவு அறிவித்தது. பிரான்ஸ் இரு நாடுகளுக்கான தூதர்களை திரும்ப அழைப்பது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இணைந்து புதிய பாதுகாப்பு கூட்டாண்மையை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா பிரான்சுடன் கையெழுத்திட்ட மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல் ஒப்பந்தத்தை மீறி அமெரிக்காவுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்தியது. இதற்கு, பிரான்ஸ் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது.

அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் இரகசியமாக இணைந்த செயல், பிரான்ஸ் பொருளாதார நலன்களுக்கு மாபெரும் இழப்பை வழங்கியுள்ளது. இதனைவிட கூட்டாளிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டதனால் ஏற்பட்ட பெரும் அவமானம் பிரான்ஸை காயப்படுத்துகிறது.

பிரான்ஸ் 240 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது, பிரான்சின் நம்பிக்கையை அமெரிக்கா இழந்துவிட்டது. இது அமெரிக்காவின் சுயநலம், மூர்க்கத்தனம் மற்றும் மேலாதிக்கத்தை வெளிக்காட்டுகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, நித்திய நலன்கள் மட்டுமே அதன் கருத்தில் உள்ளன உண்மையான நண்பர்கள் எவரும் கிடையாது. ஐரோப்பா நெடுநோக்கு தன்னாட்சியை நாட வேண்டும்.