ஆஸ்திரேலியா தன்னை முட்டாள் ஆக்கிக் கொள்ளக் கூடாது
2021-09-20 20:04:13

பிரான்ஸுடன் கையெழுத்தான நீர் மூழ்கி ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா அண்மையில் ஒருசார்பாக மீறி, அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் ஒத்துழைத்து புதிய பாதுகாப்பு கூட்டமைப்பை உருவாக்கியது. இது பிரான்ஸுக்குக் கோபத்தை ஏற்படுத்தியதோடு, நம்பிக்கை துரோகி என்ற கெட்ட பெயரையும் ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு வந்தது. இது மட்டுமல்ல, புதிய பாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கத்துக்கான செய்தியாளர் கூட்டத்தில், அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் நன்றி தெரிவித்த போது, ஆஸ்திரேலியத் தலைமை அமைச்சரின் பெயரை மறந்து விட்டு அவரை “ஆஸ்திரேலியாவின் அந்த நபர்” என அழைத்தார். இருப்பினும் “அந்த நபர்” சிரிப்புடன் பெருவிரல் சமிக்கை காண்பித்தார்.

தலைமை அமைச்சரான மோரிசன், ஆஸ்திரேலிய மக்களை மிக அருவருப்பான வெட்கமான நிலையில் வைத்தார். தற்போதைய அரசு, நாட்டின் நலனை விற்பனை செய்வதன் மூலம் தனக்கு சுயநலன்களை தேடி வருவதாகவும், ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் சதுரங்க காய் ஒன்றை போல் உள்ளது என்றும் ஆஸ்திரேலிய மக்கள் கவலைப்படுவது இயல்பு.

தற்போதைய ஆஸ்திரேலியா மோரிசனின் கட்டுப்பாட்டில், கேலி கூத்தாக மாறியுள்ளது. இப்படி செயல்பட்டால் எதிர்காலம் இல்லை. சொந்த மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு நாட்டின் சுதந்திரம் மற்றும் கௌரவத்தை வெளிப்படுத்த வேண்டும்.