பயனுள்ளதாக இருக்கும் சீனாவில் உண்மையான ஜனநாகயம்
2021-09-23 20:22:52

ஜனநாயகம், தனியொரு நாட்டின் தனிக்காப்புரிமை அல்ல. இது பல்வேறு நாட்டு மக்களின் உரிமையாகும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செப்டம்பர் 22ஆம் நாள் நடைபெற்ற ஐ.நா பொது பேரவையின் 76ஆவது கூட்டத் தொடரின் பொது விவாதத்தில் தெரிவித்தார். 23ஆம் நாள், அமெரிக்காவுக்கான சீனத் தூதர் சொற்பொழிவு ஆற்றிய போது, சீனாவின் ஜனநாயகம் பற்றிய எடுத்துக்கூறினார்.

உலக நாடுகளால் ஆழமாகப் பரிமாற்றம் மற்றும் ஆய்வு செய்யப்படத்தக்க விவகாரம் இதுவாகும். பொது மக்களுக்கு உரிமை உண்டு என்பது, ஜனநாயகத்தின் உள்ளடக்கமாகும். கடந்த 2000க்கும் மேலான ஆண்டுகளாக, இந்தக் கருத்து மேலை நாடுகளில் உண்மையாகச் செயல்படுத்தப்படவில்லை. மேலை நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, வலுவான பொருளாதார மற்றும் இராணுவ வலிமையைக் கொண்டு, உலக ஜனநாயக அரசியலுக்கான கருத்து வெளிப்பாட்டுரிமையைக் கட்டுப்படுத்த முயன்று வருகிறது. உலகத்தின் பல்வேறு நாடுகளில் பல்வேறு நிலைமைகள் உள்ளன., பொது மக்களின் கருத்துக்களைப் பிரதிபலித்து சொந்த நிலைமைக்கு உரிய ஜனநாயக அமைப்புமுறையைத் தேர்ந்தடுக்கும் உரிமை ஒவ்வொரு நாடுக்கும் உண்டு.

சீனாவில், மக்களே, ஜனநாயகத்தின் மையமாகும். சீனாவின் முக்கிய சட்டமியற்றல் கொள்கைகள் அனைத்தும், ஒழுங்குடன் ஜனநாயக வழிமுறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. சீன மக்கள் வறுமையிலிருந்து விடுபடுவது, கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியில் சாதனைகளைப் பெறுவது, உலகப் பொருளாதார அதிகரிப்புக்குச் சீனா பல ஆண்டுகளாக 30 விழுக்காட்டுக்கும் மேலான பங்காற்றுவது முதலியவை, சீனாவின் ஜனநாயக அரசியல் பயனுள்ளதாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன. மக்களுக்குச் சீனா இடைவிடாமல் நன்மை புரிவது தான், ஜனநாயகமாகும் என்று பிரான்ஸில் சீர்ப்பாடு கல்வி பிரிவின் நிறுவனர் மைக்கேல் அக்லியெட்டா கருத்து தெரிவித்திருந்தார்.