மெங் வென்சோ நாட்டுக்குத் திரும்புவது, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களுக்கான ஆட்சியைக் காட்டுகிறது!
2021-09-25 19:08:20

கனடாவில் சட்டவிரோதமாக 1028 நாட்கள் தடைக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஹுவாவெய் தொழில் நிறுவனத்தின் துணை தலைமை இயக்குநர் மென் வென்சோ, சீன அரசின் முயற்சியுடன், 24ஆம் நாள், சிறப்பு விமானத்தின் மூலம் தாய்நாட்டுக்குத் திரும்பிப் புறப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்டிருப்பதன் மூலம், நியாயம் மற்றும் சட்டத்தின் வெற்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அதோடு, சீனாவின் ஆளும் கட்சி மற்றும் அரசு சொந்த நாட்டின் குடிமக்களின் சட்டப்பூர்வ உரிமையைப் பேணிக்காக்கும் வாக்குறுதியையும், சீன மக்கள் மேலாதிக்கவாதத்தை எதிர்க்கும் வலிமையான மன உறுதியையும் இது காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.