சின்ச்சியாங்கின் மக்கள் தொகை அதிகரிப்பு நிலைமை
2021-09-26 20:33:38

சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் “சின்ஜியாங்கின் மக்கள் தொகை அதிகரிப்பு” பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையில் அதிக தரவுகளின் மூலம் சின்ச்சியாங்கின் மக்கள் தொகை அதிகரிப்பு நிலைமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வட மேற்கு சீனாவில் அமைந்துள்ள சின்ச்சியாங், பல தேசிய இனங்கள் குழுமி வாழும் பிரதேசமாகும். 2020ஆம் ஆண்டு வெளியான புள்ளி விவரங்களின்படி, பத்து ஆண்டுகாலத்தில் சின்ச்சியாங்கின் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் சீனாவில் 4ஆவது இடத்திலும், மக்கள் தொகை அதிகரிப்பு அளவு சீனாவில் 8ஆவது இடத்திலும் உள்ளது. அதோடு, உய்கூர் இன மக்களின் எண்ணிக்கை பொதுவாக வேகமாக அதிகரித்து வருகின்றது. இது 2000ஆம் ஆண்டில் இருந்த 83 லட்சத்து 45 ஆயிரத்து 600லிருந்து 2020ஆம் ஆண்டில் ஒரு கோடியே 16 லட்சத்து 24 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது. ஆண்டு அதிகரிப்பு விகிதம் 1.67 விழுக்காடு ஆகும். அடுத்த காலக் கட்டத்தில் சின்ச்சியாங் மக்கள் தொகை குறிப்பாக சிறுபான்மை தேசிய இன மக்கள் தொகை நிதான அதிகரிப்பை நிலைநிறுத்தும் என்று இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சின்ச்சியாங்கின் மக்கள் தொகை அதிகரிப்பு, இப்பிரதேசத்தின் மனித உரிமை இலட்சியத்தின் முன்னேற்றத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும். சமூக நலன்கள் அதிகரிப்பு, சீன அரசு மேற்கொண்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் சாதனை ஆகியவை இதற்கு காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்ச்சியாங்கில் மக்கள் தொகை அதிகரிப்பு வரலாற்றில் முன்கண்டிராதது என்பதை தரவுகள் காட்டுகின்றன. சின்ச்சியாங் பற்றி சீனாவுக்கு எதிரான மேலை நாட்டுச் சக்திகள் உருவாக்கிய பொய் கூற்றுகளால், சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாது. சின்ச்சியாங்கின் நவீனமயமாக்கப் போக்கினையும், சீனாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தையும் தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.