சீனாவின் பன்முக ஓரளவு வசதியான வாழ்க்கை உலகிற்கு மாபெரும் பங்கு
2021-09-29 09:57:54

சீனாவின் பன்முக ஓரளவு வசதியான வாழ்க்கை எனும் வெள்ளையறிக்கையை 28ஆம் நாள் சீன அரசு வெளியிட்டது. இது, ஓரளவு வசதியான சமூகத்தைப் பன்முகங்களிலும் கட்டியமைப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் நடைமுறைகளை மீளாய்வு செய்து, சீனப் பாணியுடைய நவீனமயமாக்கக் கட்டுமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு, சர்வதேச சமூகத்தின் பொது கவனத்திற்குப் பதில் அளித்துள்ளது.

இந்த வெள்ளையறிக்கையின் அறிமுகத்தின் மூலம், சீனாவின் பன்முக ஓரளவு வசதியான வாழ்க்கை, பல பரிமாணங்கள் கொண்ட வசதியான வாழ்க்கையாகும் என்பதை அறிந்து கொள்ள முடியும். தவிரவும்,  இது, உலகுடன் தொடர்பு கொண்ட போது முன்னேற்றப்பட்டு, உலகின் கூட்டு வளர்ச்சியை வலுவுடன் மேம்படுத்தி வருகிறது. மேலும், இப்போக்கில் சீனா பெற்ற அனுபவம், பல வளரும் நாடுகள் நவீனமயமாக்கம் நோக்கி நடைபோடுவதற்கு புதிய பாதையை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.