மனித உரிமைத் துறையில் சீனா பெற்றுள்ள சாதனைகள்
2021-10-01 19:00:20

2016 முதல் 2020ஆம் ஆண்டு வரையான தேசிய மனித உரிமை செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்திய போக்கில் சீனா பெற்றுள்ள சாதனைகள் செப்டம்பர் 29ஆம் நாள் வெளியிடப்பட்டன. இத்திட்டத்தில் வகுக்கப்பட்ட 168 இலக்குகளும் கடமைகளும் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனைகள் மூலம் சீனாவின் ஆளும் கட்சியும் சீன அரசும், மக்களுக்காக ஆட்சி புரிவது என்ற கருத்தின் வழிகாட்டலுடன், சீனாவின் மனித உரிமை உத்தரவாதத் துறையில் அதிக சாதனைகள் பெறப்பட்டுள்ளதை வெளியுலகம் அறிந்து கொள்ளலாம்.

தற்போது சீன மக்கள் செல்வமடைந்துள்ளனர். அவர்களின் இன்ப உணர்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சீனாவில் ஓரளவு வசதியான சமூகத்தை பன்முகங்களிலும் உருவாக்கி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முறையில் தீவிர வறுமைப் பிரச்சினையைத் தீர்ப்பது, சீனாவின் “மிக பெரிய மனித உரிமை திட்டப்பணியாகும்” என்று சில விமர்சனக் கட்டுரைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீனாவின் மனித உரிமை வளர்ச்சி, மனித குலத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க சீன விவேகத்தையும் சீன முன்மொழிவுகளையும் வழங்கியுள்ளது.

ஓரளவு வசதியான சமூகத்தை பன்முகங்களிலும் உருவாக்கியது, சீன மனித உரிமை வளர்ச்சிக்கான புதிய துவக்கப் புள்ளியாகும். அண்மையில் அடுத்த ஐந்தாண்டு மனித உரிமை செயல் திட்டத்தை சீனா வெளியிட்டுள்ளது.

புதிய வளர்ச்சி காலக்கட்டத்தில் சீனா நுழைவதுடன், சீனாவின் மனித உரிமை இலட்சியத்தின் முன்னேற்றத்துக்கு மேலும் வலுவான அடிப்படை கிடைக்கும். உலக மனித உரிமை கட்டுப்பாட்டை விரைவுபடுத்தி, மனித குலத்தின் நலன்களை அதிகரிக்க சீனா மேலதிக பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.