சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்கள் எட்டிய ஒத்த கருத்துக்களை அமெரிக்கா நடைமுறைப்படுத்த வேண்டும்
2021-10-07 18:35:29

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினர் யாங்சியேச்சு, தேசிய பாதுகாப்பு விவகாரத்துக்கான அமெரிக்க அரசுத் தலைவரின் உதவியாளர் ஜேக் சல்லிவன் ஆகியோர் உள்ளூர் நேரப்படி அக்டோபர் 6ஆம் நாள் ஸ்விட்சர்லாந்தின் சூரிச் நகரில் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

கடந்த சில ஆண்டுகளில், சீன மற்றும் அமெரிக்க உறவு மோசமாகியுள்ளது. இருதரப்பு உறவுகளில் அமெரிக்காவுக்கு தவறான எண்ணம் உள்ளதுவே இதற்கான காரணமாகும். எனவே, இரு தரப்புகளும் நெடுநோக்கு மற்றும் தொடர்பை வலுப்படுத்தி, குறிப்பாக, சீனாவின் மீதான தவறான எண்ணத்தை அமெரிக்கா சரிப்படுத்த வேண்டும். இது, சீன-அமெரிக்க உறவு இயல்பான பாதைக்கு மீண்டும் திரும்புவதை முன்னேற்றுவதற்கு மிக முக்கியமானது.

சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களுக்கு அமெரிக்கா பயனுள்ள முறையில் மதிப்பு அளிக்க வேண்டும். தைவான், ஹாங்காங், சின்ஜியாங், திபெத், கடல் மற்றும் மனித உரிமைகள் தொடர்புடைய பிரச்சினைகளைப் பயன்படுத்தி சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும். அவை, சீன-அமெரிக்க உறவை இயல்பான பாதையில் மீண்டும் திரும்புவதற்கான முன்நிபந்தனையாகும்.