உலகின் பல்லுயிர் பாதுகாப்புக்கு சீனாவின் ஞானம்
2021-10-08 20:15:09

8ஆம் நாள் வெளியிடப்பட்ட சீனாவில் பல்லுயிர் பாதுகாப்பு தொடர்பான வெள்ளை அறிக்கை, இத்துறையின் சீனாவின் சிந்தனைகள், நடவடிக்கைகள் மற்றும் சாதனைகளை, சர்வதேசச் சமூகத்துக்குக் காட்டுகிறது. இதிலுள்ள தரவுகளின்படி, சிறப்பு பல்லுயிர் பாதுகாப்புப் பாதையில் சீனா முன்னேற்றங்களை அடைந்து வருகிறது என காட்டப்பட்டுள்ளது.

ஐ.நாவின் பல்லுயிர் பொது ஒப்பந்தத்தை உருவாக்கிய நாடுகளின் 15ஆவது மாநாட்டை நடத்த விருக்கும் நாடான சீனா, உலகின் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்குப் புதிய சக்தியை ஊட்டும்.