புதிய காலத்தில் அடியெடுத்து வைக்கும் சீன-ஜப்பானிய உறவு
2021-10-09 14:46:46

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஜப்பான் தலைமையமைச்சர் ஃபூமியோ கிசிடாவுடன் அக்டோபர் 8ஆம் நாள் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். இரு நாடுகளின் உயர் நிலை தொடர்புக்கு ஜப்பானின் புதிய அரசு முக்கியத்துவம் அளிப்பதைச் சீனா பாராட்டுகிறது. ஜப்பானுடன் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, புதிய காலத்தின் சீன-ஜப்பானிய உறவின் உருவாக்கத்தை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான தொடர்பு இதுவாகும். தற்போது சீன-ஜப்பானிய உறவு வாய்ப்பு மற்றும் அறைக்கூவலை ஒரே நேரத்தில் எதிர்நோக்குகிறது. இரு நாடுகளும் எப்படி வாய்ப்பைப் பயன்படுத்தி, அறைக்கூவலைச் சமாளிப்பது, இரு நாட்டு மக்களின் நலனுடன் தொடர்புடையது மட்டுமல்லாமல், ஆசியா, மற்றும் முழு உலகத்தின் அமைதி மற்றும் வளர்ச்சியுடன் தொடர்புடையது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான 4 அரசியல் ஆவணங்களின் கோட்பாடுகள் மற்றும் எழுச்சிகளை ஷி ச்சின்பிங் இத்தொடர்பில் மீண்டும் வலியுறுத்தினார். இரு தரப்பு உறவு சரியான திசையை நோக்கி வளர்ச்சியடைவதற்கு இது துணைப் புரியும். மேலும், நேர்மையான மற்றும் திறப்புத் தன்மையுடைய வர்த்தக மற்றும் முதலீட்டுச் சூழ்நிலையை இரு நாடுகளும் கூட்டாகப் பேணிக்காத்து, உண்மையான பலதரப்புவாதத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.