அமெரிக்காவின் உயிரிய ராணுவ நடவடிக்கைப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியது அவசியம்
2021-10-10 18:38:25

அமெரிக்காவின் உயிரிய ராணுவ நடவடிக்கைப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியது அவசியம் என்ற தலைப்பிலான கட்டுரையை, சீனாவின் மக்கள் நாளேடு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

உயிரிய ஆயுத தடை ஒப்பந்தத்தை பலப்படுத்தும் கூட்டறிக்கையை சீனா மற்றும் ரஷியாவின் வெளியுறவு அமைச்சர்கள் அக்டோர் 7ஆம் நாள் வெளியிட்டுள்ளனர். உயிரிய ஆயுத தடை ஒப்பந்தமானது, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகமிகவும் முக்கியமானது என்று இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.  இந்த ஒப்பந்தத்தைப் பேணுக்காப்பதில் சீனா மற்றும் ரஷியாவின் மனவுறுதியை விளக்கி கூறியதோடு, அமெரிக்காவின் உயிரிய ராணுவ நடவடிக்கை மீது மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும்,  வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு என்ற மனப்பான்மையுடன், அமெரிக்கா, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள உயிரிய ராணுவ நடவடிக்கைகளை முழுமையாக தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சரிபார்ப்பு முறைமையின் உருவாக்கம் மீதான தடுப்பை நிறுத்தி, அமெரிக்கா கண்காணிப்பு மற்றும் சரிபார்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உயிரிய ராணுவ நடவடிக்கைகள் எப்போதும் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன. அமெரிக்க ராணுவத்தின் தலைமையில், உலகளவில் 200க்கும் அதிகமான உயிரிய ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது, பரந்த அளவில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2001ஆம் ஆண்டு வரை, 7 ஆண்டுக்கால கடினமான பேச்சுவார்த்தைக்கு பிறகு,  உயிரிய ஆயுத தடை ஒப்பந்தம் குறித்து பன்னாடுகள்  உடன்பாட்டை எட்டுவதை முன்னிட்டு,   உயிரிய துறையிலான நடவடிக்கைகளை தொழில் நுட்பத்தில் சரிபராக்க முடியாது  என்பதை காரணாக கொண்டு, அமெரிக்கா திடீரென பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியது. 20 ஆண்டுகளில், அமெரிக்கா பேச்சுவார்த்தை மீண்டும் துவங்குவதை எப்போதும் தனியாகவே எதிர்க்கிறது. இந்த ஒப்பந்தத்தின் பயன் மற்றும் செல்வாக்கு பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது.