“மனித உரிமை பாதுகாப்பாளர்கள்” தனது கெட்ட பழக்கத்தை கைவிட வேண்டும்
2021-10-11 20:36:31

ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் 48ஆவது கூட்டத் தொடர் சமீபத்தில் நிறைவு பெற்றது.  ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்திலேயே, பல்வேறு தரப்புகளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு மேற்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். ஆனால், சில மேற்கத்திய நாடுகள், இந்த ஒத்துழைப்பு மேடையை அரசியல் மோதலுக்கான அரங்கமாக மாற்ற முயல்கின்றன. இதில், சின்ஜியாங், ஹாங்காங் விவகாரங்களின் மூலம் இந்த நாடுகள் சீனா மீது அவதூறு பரப்பி வருகின்றன. இருப்பினும், இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கிடையாது.

இந்த கூட்டத் தொடரில், கிட்டத்தட்ட 100 நாடுகள், கூட்டுரை, கூட்டு கடிதம் உள்ளிட்ட வழிமுறைகளில், சீனாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சீனா, பன்னாட்டுச் சமூகத்தின் ஆதரவை பெருமளவில் பெற்றது எப்படி?

ஒருபுறம், மனித உரிமைகள் பாதுகாப்பில் சீனா நிறைய சாதனை படைத்துள்ளது என்ற உண்மையின் அடிப்படையில், பல்வேறு நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. மறுபுறம், மனித உரிமைப் பிரச்சினையை சாக்குப்போக்காக கொண்டு பிற நாடுகளின் உள்விகாரங்களில் தலையிடும் சில மேற்கத்திய நாடுகளின் செயல்களுக்கு  எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அந்த மேற்கத்திய நாடுகளின் மனித உரிமை மீறல்களுக்கு கடும் மனநிறைவின்மையையும் சர்வதேச சமூகம் காட்டுகிறன.

சொந்த நாட்டின் நடைமுறைக்கு ஏற்ப, சீனா, மனித உரிமைகளின் வளர்ச்சிப் பாதையைத் தேடி கண்டுபிடித்தது. இந்நிலையில், சீனா சொந்த நாட்டு மக்களின் மனித உரிமைகளுக்கு பாதுகாப்பு அளித்துள்ளதோடு, உலகின் மனித உரிமைகளின் இலட்சியத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துள்ளது.

தன்னை தானே மனித உரிமை பாதுகாப்பாளர்கள் என அழைத்த  மேற்கத்திய நாடுகள், தனுக்குரிய பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். வேறு நாடுகளின் மனித உரிமைகள் குறித்து விமர்சித்து பழிசுமத்துவது என்ற பழக்கத்தை கைவிட வேண்டும்.