உயிர் பொது சமூகத்தின் உருவாக்கத்துக்குச் சீனாவின் பங்கு
2021-10-13 10:57:21

பல்லுயிர் பாதுகாப்பு, நமது பூமி தாயகத்தைப் பேணிக்காத்து, மனிதர்களின் தொடர வல்ல வளர்ச்சியை முன்னேற்றுவதற்குத் துணை புரியும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 12ஆம் நாள் உயிரின பல்வகைமை பொது ஒப்பந்தத்தை உருவாக்கிய நாடுகளின் 15ஆவது மாநாட்டில் உரை நிகழ்த்திய போது தெரிவித்தார்.

சீனாவில் பல்லுயிர் பாதுகாப்பு, தேசிய நெடுநோக்குத்திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக, சீனாவில் வனவள அதிகரிப்பு பரப்பளவு, 7 கோடி ஹெக்டரைத் தாண்டி, உலகின் முதலிடம் பிடித்துள்ளது. பிரிட்டனின் நேச்சர் என்ற இதழ் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், பொருளாதார வளர்ச்சிக்கும், பல்லுயிர் மற்றும் உயிரினச் சூழ்நிலை அமைப்பிலுள்ள இழப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கும் இடையில் சமநிலையைத் தேடுவதில், சீனா பெற்றுள்ள அனுபவம், உலகின் பல்லுயிர் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

நடப்பு மாநாட்டை வாய்ப்பாகக் கொண்டு, பல்வேறு நாடுகளுடன் இணைந்து 2020க்குப் பின் உலகின் பல்லுயிர் கட்டுக்கோப்பை உருவாக்க சீனா பாடுபடும்.