சீன வர்த்தகத்தின் சீரான வளர்ச்சிப் போக்கில் மாற்றமில்லை
2021-10-13 19:06:22

இவ்வாண்டின் முதல் 3  காலாண்டுகளில் சீனாவின் சரக்கு வர்த்தகத்தின்  ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை தலா 22.7  மற்றும் 22.6 சதவீதம் அதிகரித்துள்ளது.  சீன வெளிநாட்டு வர்த்தகத்துறையில் சீராகாக வளர்ந்து வருவது போன்ற ஒட்டுமொத்த நிலை மாறவில்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

வெளிநாட்டு வர்த்தகத் துறையில் சீனா இத்தகைய சாதனை படைப்பதற்கு மூன்று ஆதாரங்கள்  இருந்தன. முதலில்,  சீனப் பொருளாதார வளர்ச்சிப் போக்கில் அடிப்படை ஆதாரம் மாறவில்லை. இது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறைக்கு நிலையான ஆதாரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக,  வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான புதிய தொழில் மற்றும் புதிய வழிமுறையை விரைவாக வளர்ப்பது,  பன்னாட்டு வர்த்தகத்தைத் எளிதாக்கும் சீர்திருத்தத்தை ஆழமாக்குதல்,  தொழில் புரிவதற்கான சூழலை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் கொள்கைகளையும் சீனா  தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

மூன்றாவதாக, வெளியுலகத்தில்  பொருளாதார மற்றும் வர்த்தகம் குறிப்பிட்ட அளவில் மீட்சி அடைந்து வருவது, சீன வர்த்தகத்திற்கு நல்ல ஆதாரம் அளித்துள்ளது.

இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில், சீனாவின் இறக்குமதி துறையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு புதிய உயர் பதிவை எட்டி,  22.6 சதவீதம்  அதிகரித்துள்ளது. இது, உலகின் மொத்த தேவைகளுக்கு சீனச் சந்தையின் பெரிய பங்களிப்பையும் காட்டுகிறது. அதன் மூலம், சீனா உலகப் பொருளாதாரம் மீட்சி அடைவதற்கு இடைவிடாத சக்தியை கொண்டு வருகிறது.