மக்களே நாட்டின் உரிமையாளர்கள்
2021-10-15 11:27:08

ஒரு நாட்டில் ஜனநாயகம் உள்ளதா இல்லையா என்பதற்கு, மக்கள் அந்நாட்டின் உரிமையாளராக இருப்பது தீர்க்கமான திறவுகோலாகும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார். மக்களின் நடைமுறை தேவைகளை நிறைவேற்றும் ஜனநாயக அமைப்புமுறை சீனாவிலுள்ள ஜனநாயகத்தின் தனிச்சிறப்பை வெளிப்படுத்தியுள்ளது.

உலகளவில் மிகப் பெரிய கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆரம்பத்திலேயே மக்களின் உரிமைகளைப் பேணிக்காப்பதை அதன் முக்கிய கடமைகளாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

தேசிய மக்கள் பேரவை என்ற அமைப்புமுறையின் மூலம் சீன மக்கள் ஜனநாயகத்தை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். கொள்கைகளை வகுத்தல், நடைமுறைப்படுத்துதல்  மற்றும் மேலாண்மை ஆகியவற்றின் போக்கில் சீனாவின் ஆளும் கட்சியும் அரசும் மக்களின் குரலைக் கேட்டு வருகின்றது.

ஜனநாயகத்தின் நடைமுறையாக்கத்துக்கு பல்வகை வழிமுறைகள் இருக்கலாம் என்று சீனாவின் முழுமையான ஜனநாயகத்தின் வெற்றி காட்டுகின்றது. சொந்த நாட்டின் நிலைமைக்கேற்ற ஜனநாயக வளர்ச்சிப் பாதையை அந்தந்த நாடுகளே தேர்ந்தெடுக்கலாம்.

இன்பமான வாழ்க்கையின் மீதான மக்களின் ஆர்வத்தை சீனா தொடர்ந்து நிறைவேற்றி, மனித குலத்தின் அரசியல் நாகரிக முன்னேற்றுத்துக்கு மேலதிகமாகப் பங்காற்றும்.