உலக வளர்ச்சிக்கு ஏற்ப உலக போக்குவரத்து ஒத்துழைப்பை முன்னெடுக்க முயற்சி!
2021-10-15 19:02:49

உலக வளர்ச்சிக்கு ஏற்ப உலக போக்குவரத்து ஒத்துழைப்பை முன்னெடுக்க முயற்சி!_fororder_1127958984_1634251384266_title0h

உலக வளர்ச்சிக்கு ஏற்ப, உலக போக்குவரத்து ஒத்துழைப்பை முன்னெடுத்து, உள்கட்டமைப்புகளின் இணைப்பு, தடையில்லா வர்த்தகம் மற்றும் முதலீடு, நாகரிகங்களின் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு புதிய அத்தியாயத்தை எழுத வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 14ஆம் நாள் நிலையான போக்குவரத்துக்கான 2வது ஐ.நா. உலகளாவிய மாநாட்டில் உரைநிகழ்த்துகையில் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு போக்குவரத்து முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது அவசியமானது. தற்போது, போக்குவரத்துத் துறையை சீனா பெரிதும் வளர்த்து வருகிறது.  இதனிடையில், சீனாவின் வளர்ச்சி, உலகின் நிலையான போக்குவரத்து வளர்ச்சிக்கு நன்மையை கொண்டு வருகிறது. 140 நாடுகள் மற்றும் 32 சர்வதேச அமைப்புகளுடன் சீனா கையெழுத்திட்ட ஒத்துழைப்பு ஆவணங்களில் போக்குவரத்து வசதிகளின் இணைப்பு தொடர்பான ஒத்துழைப்புகள் அதிகமாக உள்ளன. எடுத்துக்காட்டாக, சீனா-லாவோஸ் இருப்புப்பாதை, இந்தோனேசியாவின்  ஜகார்த்தா-பாண்டுங் அதிவேக இருப்புப்பாதை உள்ளிட்ட உள்கட்டமைப்புக் கட்டுமானத் திட்டங்கள், உள்ளூர் மக்களின் போக்குவரத்து நிலையை தெளிவாக மேம்படுத்தியுள்ளதோடு, உள்ளூர் பொருளாதாரச் சமூகத்தின் நிலையான வளர்ச்சியை முன்னெடுப்பதாகவும் அமையும்.