ஆண்டு முழுவதும் பொருளாதார வளர்ச்சி குறிக்கோள்களை நிறைவேற்றும் சீனா
2021-10-18 19:05:10

சீன அரசு 18ஆம் நாள் 2021ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளின் தேசிய பொருளாதாரத் தரவுகளை வெளியிட்டது. இதன் படி, முதல் மூன்று காலாண்டுகளில் முக்கியமான ஒட்டுமொத்த பொருளாதார குறியீடுகள் பொதுவாக நியாயமான அளவில் இருந்துள்ளன. இது, சீன பொருளாதாரம் பல இடர்ப்பாடுகளையும் சவால்களையும் பயன்தரும் முறையில் எதிர்த்து, தொடர்ந்து மீட்சி அடைந்து வருவதையும், பொருளாதார வளர்ச்சி உலக அளவில் உள்ளதையும் எடுத்துக்காட்டுகிறது.

மேலும், இது 4ஆவது காலாண்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துள்ளது. சீனாவின் பொருளாதாரக் கட்டமைப்பின் தொடர்ச்சியான மேம்பாடு எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு தலைசிறந்த ஆற்றலை வழங்கும்.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் பொருளாதார மீட்சி உலகப் பொருளாதாரத்திற்கு அதிமுக்கியமானது. எப்போதும் திறப்புடன் கூடிய சீன சந்தை உலக முதலீட்டாளர்களுக்கு முக்கிய வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

ஆண்டு முழுவதும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் முக்கிய குறிக்கோள்களை நிறைவேற்றுவதை உறுதி செய்யும் வகையில், சீனா, தொடர்ந்து சந்தை உயிராற்றலைத் தூண்டி, வளர்ச்சி உந்து சக்தியை வலுப்படுத்தி, உள்நாட்டு தேவையின் ஆற்றலை வளர்க்கும்.